top of page

எழுத்து பிறந்த கதை

வணக்கம் செல்லக் குட்டீஸ் 


எழுத்துகள் எப்படி பிறந்தது என்று தெரியுமா? முதன்முதல்ல மனிதன் என்ன எழுதி இருப்பான்? அவனுக்கு என்ன புரிஞ்சிருக்கும்?


எல்லாருக்கும் புரியற மாதிரி எழுத்துகள் எடுத்ததுமே உருவாகிடுச்சா? முதல்ல அது எப்படி இருந்தது? எப்படி இன்று இருக்கும் எழுத்துகளா மாறி இருக்கும்?


இப்படி எல்லாம் யோசிச்சிருக்கீங்களா! அப்ப உங்களுக்காக தான் இந்தக் கதை.


இத ருட்யார்ட் கிப்ளிங் அப்டிங்கற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் எழுதி இருக்காரு. அவர் ஆங்கில எழுத்தாளர் இல்லையா? அதனால ஆங்கில எழுத்துகள் எப்படி பிறந்தது அப்படிங்கறத கதையா எழுதி இருக்காரு. 


அந்தக் கதைய எழுத்தாளர் கோகிலா, தமிழில் மொழிபெயர்த்து கொடுத்திருக்காங்க. இப்ப மாதிரியே அப்பவும் வெவ்வேறு இனக் குழுக்களுக்கு வேற வேற மொழி இருந்திருக்கு. அதாவது அவங்க எழுப்பும் வித்தியாசமான ஓலிகள்.


ஒரு குழு பேசற மொழி இன்னொரு குழுவுக்கு புரியாது. அப்ப எல்லாருக்கும் புரியற மாதிரி ஓவியங்கள் வரைஞ்சு காட்டினால் எப்படி இருக்கும்!


அந்த ஓவியங்கள் தான் பின்னாடி எழுத்துகளாக மாறி இருக்கும் இல்லையா!

என்ன என்ன எழுத்துகள் எப்படி உருவாச்சு அப்படின்னு ரொம்ப சுவாரஸ்யமா எழுதி இருக்காங்க.

 

இந்த புத்தகத்தை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.. 

எழுத்து உருவான வரலாறு தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தீங்கன்னா

இந்த புத்தகம் உங்களுக்கு தான்.


  • ராஜலட்சுமி நாராயணசாமி

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page