அறிமுகம்

இயல் – தமிழ் சிறார் இலக்கியத்தில் புதிய தடம்பதிக்க, புதிய திசைகளில் சிறகுகள்
விரிக்க, சிறந்த படைப்புகளை அடையாளம் காட்ட, நம் முன்னோடிகளின்
சாதனைகளைத் தெரிந்துகொள்ள, அயலக இலக்கியங்களை அறிமுகப்படுத்த, சிறார்
இலக்கியச் சிந்தனைப்பள்ளிகளை வளர்த்தெடுக்க, விவாதங்களை, உரையாடல்களை
ஒருங்கிணைக்க உறுதி பூண்டுள்ளது.
இலக்கியம், அறிவியல், சூழலியல், கல்வியியல், பெற்றோரியம், குழந்தைகளின்
உரிமைகள் சார்ந்து புதிய விவாதங்களை உருவாக்கும்.
இலக்கியம், நாடகம், பாடல், புதிர்கள், சினிமா, ஆளுமை அறிவோம், காமிக்ஸ்,
பரிசோதனை, கேள்வி பதில் தொடர்கள் என்று அனைத்து வயது குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்குமான இதழாக இருக்கும்.
ஆசிரியர்
உதயசங்கர்
150 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும்
பங்களிப்பு செய்து வருகிறார். பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
ஆசிரியர் குழு
கமலாலயன்
சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று
பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசை
எட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
அமிதா
சூழலியலாளர், இதழியலாளர், சூழலியல், அறிவியல், மொழிபெயர்ப்பு,
புனைவு, சார்ந்து 20 – க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சூழலியல்
நூல்களுக்கான இலக்கிய விருது பெற்றிருக்கிறார்.
சாலை செல்வம்
பெண்ணியலாளர், கல்வியியலாளர்,
30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார்.
புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
சரிதா ஜோ
சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.
1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,
100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
நிர்வாகக்குழு
மாதவராஜ்
எழுத்தாளர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
நாவல், சிறுகதை, வரலாறு, அரசியல், போன்ற வகைமைகளிலும் எழுதியிருக்கிறார்.
தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர்.
கோ.கண்ணன்
எழுத்தாளர், ஒளிப்படக்கலைஞர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர்.
இதழ் வடிவமைப்பு
மாதவராஜ்