top of page

வளரிளம் புதிர்ப்பருவம் - 6

ree

ஆதம், 80 சதவீத பெண்கள் விரும்புவது 20 சதவீத ஆண்களைத் தான் என்று  சொல்கிறான்.

"பெண்களைக் கவர்வது சாதாரணம் இல்லை. வித்தைகள் தெரிஞ்சிருக்கணும். அவனை அவ (incel)  வேஸ்ட்டுன்னு சொல்றா." என்று ஆதம் சொல்கிறான். 


"அவனுக்கு பதிமூன்று வயது. இந்த வயசுல பொண்ணுங்க விஷயத்தில் வேஸ்ட்டுன்னு சொன்னா, என்ன அர்த்தம்?" பாஸ்கம் அதிர்ச்சியாகக் கேட்கிறார்.


ஆமாம்ப்பா. அவங்க வேஸ்ட்டுன்னு சொன்னா அதான் அர்த்தம். அவன் வாழ்க்கை பூராவும் தனியாகவே இருக்கப்போறான் என்று அர்த்தம். அதுக்குப் பலர் ஹார்ட் போட்டிருக்காங்க. அவங்க கேட்டி சொல்ற எல்லாத்தையும் ஒத்துக்கறாங்க என்று அர்த்தம். 


அப்போ இதெல்லாம் கேலி செய்றதா? வெறும் கேலி கிண்டலா? கொஞ்சம்  அதிகமா இருக்கு ஆதம்.


"அப்பா, நான் சொல்றத நீங்க நம்பல இல்ல, ஓவரா இருக்குல்ல." என்று ஆதம் அறைவிட்டு வெளியேற முயல்கிறான்.


இல்ல ஆதம். இது எனக்குப் பயனுள்ளது. எனக்குத் தெரியாததால் கேட்டேன். வெறும் ரெண்டு சிம்பலை வச்சுக்கிட்டு இது எல்லாத்தையும் நம்பறது கஷ்டமா இருக்கு.


மெசேஜ் அனுப்பும் போது ஹார்ட் போடுவீங்கல்ல. அது என்ன கலர்?


சிவப்பு.


❤️ சிவப்பு இதயம்- காதல்,

🤎 ஊதா இதயம்- காம உணர்வுத்தூண்டல்.

💛 மஞ்சள் இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு, உனக்குப் பிடிச்சிருக்கா?

❤️ இளஞ்சிவப்பு இதயம்- எனக்குப் பிடிச்சிருக்கு ஆனா செக்ஸ் வேண்டாம்.

🧡ஆரஞ்ச் இதயம்- உனக்கு ஒன்றும் ஆகாது. 

எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு அப்பா.

ஜேமிக்கு அவ அனுப்பிய செய்திகளில் வேற வேற emoji. எல்லாமே வேற வேற அர்த்தம்.


அப்போ கேட்டி தான் ஜேமியை கேலி பண்ணினாளா? 


"அப்பா, அவங்க என்னைவிடச் சின்னவங்க. எனக்கு அவங்களத் தெரியாது. இதெல்லாம் இன்ஸ்டாவில் அவங்க மெசேஜ் எல்லாம் பார்த்ததை வச்சு சொல்றேன்." என்று ஆதம் சொல்கிறான்.

 

பாஸ்கமிற்கு இது புதிய திறப்பு. இதய வடிவங்களுக்குப் பொதுவான அர்த்தம் வேறு. அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகள்  நட்பு வட்டங்களில் உள்ள அர்த்தங்கள் வேறு.  


Insta பதிவுகளில் கேட்டியின் கருத்துகள் ஜேமியைக் கேலி செய்வதாக இருந்ததே கொலைக்கான அடிப்படைக் காரணம் என்று பாஸ்கம் புரிந்து கொள்கிறார்.


பாஸ்கம் தன்னுடன் வந்திருந்த துணை ஆய்வாளரரான பிராங்கிடம், நடந்தது Incel என்று சொல்கிறார்.


பாஸ்கம் ரயானைப் பார்க்க வேண்டும் என்று அவனது வகுப்பிற்குச் செல்கிறார். ரயான் ஜன்னல் வழியே வெளியே குதித்து ஓடுகிறான். பாஸ்கம் அவனைத் துரத்திச் செல்கிறார்.பள்ளிக்கு வெளியே சிறிது தூரத்தில் அவனைப் பிடிக்கிறார். 


கேட்டி தான் ஜேமியைக் கேலி செய்தாளா? என்று பாஸ்கம், ரயானிடம் கேட்கிறார். 

எனக்குத் தெரியாது என்று ரயான் சொல்கிறான். 

Incel என்று கேட்டி, ஜேமியைச் சொன்னதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறார். ரயான் தெரியாது என்று சொல்கிறான். பாஸ்கம், ஒரு பெண் குழந்தையின் உயிர் போயிருக்கு. கொலை செய்த கத்தி எங்கே என்று கேட்கிறார். 

கத்தி என்னுடையது. இப்போ எங்கே என்று தெரியாது என்று ரயான் கூறுகிறான். அதனால் அவனும் கைது செய்யப்படுகிறான். 


கொலைக்கான காரணம், சமூக வளைத்தளங்களில் செய்யப்படும் கேலி. 


நம் சமூகத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண், தான் பெண்ணை விட மேலானவன் என்ற சூழலில் வளர்கிறான். ஆணாதிக்கச் சிந்தனையும் செயல்பாடுகளும் இயல்பாக அவனிடம் வெளிப்படுகின்றன. 


இணையம் பரவலான போது சமூக ஊடகங்கள் பலருக்கும் பிடித்தவையாக மாறின. எண்ணங்களைப் சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமாக அவை இயங்கின. வீடு, பள்ளி போலக் கட்டுப்பாடுகள் இல்லாத சமூக ஊடகங்கள் வளரிளம் பருவத்தினரையும் பெரிதும் கவர்ந்தன.  அதிகமான விருப்பக்குறிகளைப் பெறுவதற்காகப் பலவிதமான செய்திகளைப் பதிவிடுவதில் ஆர்வம் அதிகரித்தது . மாற்றுப் பாலினத்தவரைக் கவர்தலும் அது குறித்த கதைகளும் ஆர்வத்தை அதிகப்படுத்தின. இவற்றையெல்லாம் மையமாக வைத்துப் பல்வேறு கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றே '80 சதவீதப் பெண்கள் 20 சதவீத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்பது.


 Incel என்பதும் ஆண்களை ‘ஆண்மையற்றவன்’ என்ற  குற்ற உணர்வுக்குள் தள்ளிக் கேலி செய்ய உருவாக்கப்பட்ட வார்த்தை. உன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். வாழ்நாள் முழுவதும் நீ தனியாக அல்லது உன் போன்ற ஆணுடன்தான் வாழ வேண்டும் என்று கேலி செய்யும் வார்த்தை. அப்படி இணையத்தில் பெண்களாலும் பிற ஆண்களாலும் கேலி செய்யப்படுபவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தன்னைக் கேலி செய்பவர்கள் மீது ஏற்படும் கோபம் வெறியாக மாறுகிறது. இப்படியான வெறியில் உலகெங்கும் ஏராளமான வன்முறைகள் நிகழ்கின்றன.


தொடர்ந்து பேசுவோம்.....



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page