top of page

ஆனை – புலி


ஆனைக் கன்று கரும்புக் காட்டில்

ஆடி நுழைந்ததே!

தேனாய் இனித்த கரும்புகளைத்

தேடித் தின்றதே!


பசி கொண்ட புலி அங்கே

பதுங்கி மறைந்ததே!

ஆனை மீது பாய்ந்ததம்மா

அய்யோ வேடிக்கை!


தும்பிக் கையால் கோபத்தில் ஆனை 

சுழற்றி அடித்ததே! 

பயந்து புலியும் பாயந்து ஓடிப்

புதரில் சரிந்ததே! 


ஆனை அடிக்கப் புலியின் வரிகள் 

அழிந்து போயின! 

பூனை போல நகர்ந்து புலியும் 

பொந்தில் ஒளிந்ததே!


கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page