top of page

வெள்ளாடே வெள்ளாடே

(வெள்ளாடும் இறைச்சி கடைக்காரரும்)



வெள்ளாடே வெள்ளாடே

 மேயப் போறியா? - நான்

 வேண்டும் தழை உனக்குத் தருவேன் 

கூட வருவியா ?


காடு கரை அலைந்து திரிந்து

 சுற்றி வருவேன் - அட

 காலாற மேய்வதுதான்

 மகிழ்ச்சி தருமே!


 உனக்கு பிடித்த அகத்திக்கீரை

 உடைத்து தருவேன் - நீ 

 தேடித் திரிந்து அயர வேண்டாம்

 கூட வந்திடு !


கொழுந்து புல்லைத் தின்றாலே 

வலிமை பிறக்கும் - என்

 குட்டிக்குத் தருவதற்கு

 பாலும் சுரக்கும்!


 கொட்டகையில் இடம் தருவேன்

 நனைய வேண்டாம் நீ

 கட்டிப்போட மாட்டேன் நான்

 கிட்ட வந்திடு !


வெட்டி தின்னும் உனது திட்டம்

 எனக்கு தெரியும் 

விட்டுவிடு ஓடிப் போவேன்

 விடுதலை வேண்டும்!

குருங்குளம் முத்துராஜா
குருங்குளம் முத்துராஜா

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்

 பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.

 இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024

கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது

தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page