top of page

முகமெனும் திரையில்


வானூர்தியின் சத்தம் கேட்கும் போது


 பேருந்தில் சிரிக்கும் குழந்தையை காணும் போது


நட்டு வைத்தச்செடியில் பசுந்துளிரைப் பார்க்கும்போது


 நாளை மலர காத்திருக்கும் பூ மொட்டை கண்டபோது


 கோழிக்குஞ்சுகள் தாயுடன் குடுகுடுவென ஓடும்போது


 துள்ளிவரும் ஆட்டுக்குட்டியை காணும் போது 


தோள் மீது கை போட்டு நடக்கும் சிறுவர்களை நோக்கும்போது


 தந்தையின் கைபிடித்து குதித்து நடக்கும் சிறுவனை காணும் போது


 புழுக்கத்தை விரட்டும்  காற்றின் உரசலின் போது


 துண்டிக்கப்பட்ட மின்சாரம் திரும்ப வரும் பொழுது


 அணிந்திருக்கும் புத்தாடை அழகு எனும் போது


 கடந்து செல்லும் வண்ணத்துப்பூச்சியை கண்டிட்ட போதும்


 இன்றும் உணவு கேட்டு காகம் கதவில் அமர்ந்த போதும்


 இயற்கையாய் இதழ்கள் விரிகின்றன என்முகமெனும் திரையில்..


ஷீலா ராஜன்
ஷீலா ராஜன்

தமிழ்நாடு அரசுப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியரான இவர், ஒரு கதைசொல்லி ஆவார். தமிழ்நாடு அரசின் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகக் கதைகளுக்கான காணொலிகளுக்குப் பின்னணிக் குரல் (Voice-over) கொடுத்துள்ளார். மேலும், பள்ளி ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் எழுத்தாளராகவும், குழந்தைகளுக்கான விழுமியக் கல்வி (Value Education) பாடப்புத்தகக் கதைகளின் ஆசிரியராகவும் பங்களித்துள்ளார்


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page