வைரக்கல்
- பாவண்ணன்

- 20 hours ago
- 1 min read

குளத்தில் நிறைய தண்ணீர் இருக்குது
குட்டிப் பாப்பா
தாமரைப்பூ பூத்திருக்குது
சின்னப் பாப்பா
பூவைச் சுற்றி இலைகள் மிதக்குது
குட்டிப் பாப்பா
வட்டத் தட்டென சூழ்ந்திருக்குது
சின்னப் பாப்பா
இலையில் உருளும் தண்ணீர்த் துளிகள்
குட்டிப் பாப்பா
வைரக் கல்போல் தகதகக்குது
சின்னப் பாப்பா

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.





Comments