படிக்கப் பழகு
- கமலா முரளி

- 20 hours ago
- 1 min read

பழகு பாப்பா பழகு !
படிக்கப் பழகு பாப்பா !
பைய பைய அகரவரிசை
படிக்கப் பழகு பாப்பா !
பழகு பாப்பா பழகு !
படிக்கப் பழகு பாப்பா !
படம் பார்த்து சொற்களை
படிக்கப் பழகு பாப்பா !
பழகு பாப்பா பழகு !
படிக்கப் பழகு பாப்பா !
எழுத்துக் கூட்டி சத்தமாக
படிக்கப் பழகு பாப்பா !
பழகு பாப்பா பழகு !
படிக்கப் பழகு பாப்பா !
குட்டிக் குட்டிக் கதைகளைப்
படிக்கப் பழகு பாப்பா
பழகு பாப்பா பழகு !
படிக்கப் பழகு பாப்பா !
எளிய இனிய திருக்குறளை
படிக்கப் பழகு பாப்பா !
பழகு பாப்பா பழகு !
படிக்கப் பழகு பாப்பா !
அருமையான ஆத்திசூடி
படிக்கப் பழகு பாப்பா !

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப்
படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட்
காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை,
மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர்,
கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற
இதழ்களில் வெளிவந்துள்ளன.





Comments