யானை யானை யானையாம்....

யானை யானை யானையாம்!
அழகு நிறைந்த யானையாம்!
உடலை அசைத்து மெல்லமாய்,
தெருவில் நடந்து வந்ததாம்.
யானை யானை யானையாம்!
அன்பு நிறைந்த யானையாம்!
கையை அசைத்த குழந்தையை,
மேலே ஏற்றிக் கொண்டதாம்.
யானை யானை யானையாம்!
அறிவு நிறைந்த யானையாம்!
பார்த்து பயந்த குழந்தையை,
விட்டு விலகிச் சென்றதாம்.

தமுஎகச அறம் கிளையின் துணைச் செயலாளராகச் செயலாற்றி வருகிறார். தமுஎகச அறம் – முகிழ் வாசிப்பறை எனும் சிறார் இலக்கியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்.
மருத்துவர், எழுத்தாளர், கதைசொல்லி எனப் பன்முகத் தளங்களில் இயங்கி வரும் இவர், ‘மூங்கிலில் துளை தேடும் காற்று’ எனும் ஹைக்கூ கவிதை நூல் உள்ளிட்ட மூன்று நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பல்வேறு இணைய மற்றும் அச்சு இதழ்களிலும், தொகுப்பு நூல்களிலும் வெளியாகியுள்ளன.






Good