எறும்பு

சின்ன எறும்பு போகுது,
தின்ன இரையைத் தேடுது,
தன்னைவிடப் பெரியதை
தூக்கித் தூக்கி போகுது!
சர்க்கரையைப் பார்த்ததும்
சந்தோஷமா ஓடுது,
ஒரு துகளைக் கண்டாலே
ஊருக்கெல்லாம் சொல்லுது!
பெரிய பெரிய சுமைகளை
எப்படி நீயும் தூக்குறே?
ஒற்றுமையா வாழுறோம்
எல்லாம் இங்கே சாத்தியம்!

வால்பாறையில் வசிக்கும் இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் மற்றும் கல்வியியல்புலம் பயிற்சி பெற்று ஆசிரியராக பணியாற்றுகிறார். குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதி வருகிறார்.






Super brother