வானத்திலே போர்க்களம்!

வானத்திலே போர்க்களம்
இரவெல்லாம் அமர்க்களம்
நிலவு ஒளிந்து கொண்டது
விண்மீன்கள் மறைந்தன!
கன்னங்கரிய வானிலே
மின்னல் சாட்டை சொடுக்குது
கருத்த மேகத் தேர்களும்
இடிக்கும் ஓசை முழங்குது!
சாரல் அம்புச்சரங்களாய்
சாடுது பார் பூமியை
விடிந்து வெளுத்த வானமே
வெள்ளக்காடாய் பூமியே!
சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.
இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024
கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது
தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.







Comments