top of page

இலைகள்

23 hours ago
1 min read

வாழை இலையைத் தொட்டுப் பார்த்தேன்

வழவழப்பாய் இருக்குது

காற்று வீசும் நேரத்திலே

வளைந்து வளைந்து ஆடுது!


அரச இலையைத் தொட்டுப் பார்த்தேன்

பளபளப்பாய் இருக்குது

அசையும் அழகைப் பார்க்கும்போது

தட்டு போலத் தெரியுது!


மா இலையைத் தொட்டுப் பார்க்க

நீளமாக இருக்குது

எல்லாப் பக்கமும் தலையைத் திருப்பி

வரவேற்பு சொல்லுது!


தொட்டாற்சிணுங்கி இலையைத் தொட்டேன்

மென்மையாக இருக்குது

நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு

தலையைக் குனிந்து சிரிக்குது!


பாவண்ணன்
பாவண்ணன்

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page