வலை பின்னாதே!

சிலந்தி வலைப் பின்னிடும்
சிறு பூச்சிகள் பிடிக்கவே!
வயிறு பசி காரணம்
வழி ஒன்றே சிலந்திக்கு
கருணை இல்லா மனிதனும்
கயமை வலை பின்னுகிறான்!
உழைப்பைத் திருடி அடுத்தவர்
பிழைப்பை ஏனோ கெடுக்கிறான்?
பசிக்கு வலை பின்னுதல்
பாவமில்லை சிலந்திக்கு
சதியால் வலை பின்னுதல்
சரியா? நீயே சொல்லண்ணா!

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.






Comments