top of page

கல்வி கனிய வேண்டும்


படிப்பு முழுதும் பைக்குள் இறங்கி

தோளில் தொங்குது - அதன்

பாரம் பாறாங்கல்லை போல

முதுகை வளைக்குது !


இன்னும் கொஞ்சம் குறைக்க முடிஞ்சா

இனிக்கும் கல்வி மனதில்

சின்ன சின்ன குழந்தைகளுக்கு

இறக்கை முளைக்கும் தோளில்


பத்து பாட புத்தகங்கள்

நோட்டுகள் இருக்கும் இந்த

பைக்குள்தானே வீட்டுப்பாடம்

கட்டுரை அடைக்கும்!


சோத்து டப்பா தண்ணி பாட்டில்

சேர்த்து தூக்கணும் பஸ் சு

கூட்டத்திலே ஏறி இறங்கி

திட்டும் வாங்கணும்


கால் பதிய பொதி சுமக்கும்

கல்வி முறையா -,பாடம்

மனதில் பதிய வைக்க வேறு

வழிகள் இல்லையா ?


காய்த்துப் போன தோள்கள் மீது

இரக்கம் காட்டுங்க -கல்வி

கனிய வேண்டும் இனிமையாக

மனசு வையுங்க!


சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்

 பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.

 இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024

கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது

தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page