top of page

ஆட்டுக்குட்டி தப்பித்த கதை

9 hours ago
1 min read

மேய்ச்சல் காட்டில் ஒரு ஆட்டுக்குட்டி’

அங்கும் இங்கும் அலைஞ்சுதாம் !

அங்கும் இங்கும் அலைஞ்சுதாம் !


வயிறு முட்ட மேய்ந்துவிட்டு

குதிச்சு குதிச்சு ஆடிச்சாம்!

குதிச்சு குதிச்சு ஆடிச்சாம்!


அங்க வந்த சிறுத்தை ஒண்ணு

ஆட்டுக்குட்டியப் பாத்துச்சாம்!

ஆட்டுக்குட்டியப் பாத்துச்சாம்!


ஆட்டைப் பிடிச்சு அடிச்சு தின்ன

சிறுத்தை ஆசை பட்டுச்சாம்!

சிறுத்தை ஆசை பட்டுச்சாம்!


புதருக்குள்ள ஓளிஞ்சு நின்னு

ஆட்டை நோட்டம் விட்டுச்சாம்!

ஆட்டை நோட்டம் விட்டுச்சாம்!


மரக்கிளை ஒண்ணு முறிஞ்சு தான்

சிறுத்தை மேல விழுந்துச்சாம்!

சிறுத்தை மேல விழுந்துச்சாம்!


எழுந்து நிற்க முடியாமல்

சிறுத்தை வலியில் துடிச்சுதாம்!

சிறுத்தை வலியில் துடிச்சுதாம்!


வலியில் உறுமிய சிறுத்தை சத்தம்

ஆட்டுக்குட்டிக்குக் கேட்டுச்சாம்!

ஆட்டுக்குட்டிக்குக் கேட்டுச்சாம்!


அப்போ வந்த குதிரை கிட்ட

ஆபத்து ஆபத்துன்னு சொல்லிச்சாம்!

ஆபத்து ஆபத்துன்னு சொல்லிச்சாம்!


அண்ணா என்னையும் காப்பாத்துன்னு

குதிரை கிட்ட கேட்டுச்சாம்!

குதிரை கிட்ட கேட்டுச்சாம்!


எம்பிப் பாய்ந்த ஆட்டுக்குட்டி

குதிரை மேல ஏறிகிச்சாம்!

குதிரை மேல ஏறிகிச்சாம்!


கூர் அம்பு போல குதிரையும் தான்

மின்னல் வேகத்தில் பறந்துச்சாம்!

மின்னல் வேகத்தில் பறந்துச்சாம்!


சிறுத்தை வாயில் அகப்படாமல்

ஆட்டுக்குட்டியும் தப்பிச்சுதாம்!

ஆட்டுக்குட்டியும் தப்பிச்சுதாம்!


கமலா முரளி
கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப்

படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட்

காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை,

மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர்,

கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற

இதழ்களில் வெளிவந்துள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page