பரிசு

மூனு வரைக்கும் எண்ணி முடித்தேன்
ஓடு தம்பி ஓடு
முயலைப் போல வேகமாக
ஓடு தம்பி ஓடு
தென்னந் தோப்பு வேலி வரைக்கும்
ஓடு தம்பி ஓடு
திரும்ப வேண்டாம் சிரிக்க வேண்டாம்
ஓடு தம்பி ஓடு
முடியாத எதுவும் உலகில் இல்லை
ஓடு தம்பி ஓடு
முயற்சியை மட்டும் விட்டு விடாதே
ஓடு தம்பி ஓடு
ஓடி முடித்தால் பரிசு கிடைக்கும்
ஓடு தம்பி ஓடு
ஒன்றுக்குப் பத்தாய் முத்தமும் கிடைக்கும்
ஓடு தம்பி ஒடு

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.






Comments