சுறாவும்... டால்பினும்....
- சு.ரா.தருண்கிருஷ்ணா

- Nov 15
- 1 min read

ஒரு கடல் நாடு இருந்தது.
ஒரு நாள் ஒரு சுறா (shark) வழி தெரியாம டால்பின் கடல்ல வந்து விழுந்துடுச்சு.
அதுக்கு ரொம்ப பசிச்சது. அது சாப்பிட குட்டி குட்டி மீனெல்லாம் தேடி போனது.
அப்ப தெரியாம திமிங்கலம் (killer whale) இருக்கற கடலுக்குள்ள குதிச்சிடுச்சி.
அங்க போய் மீன் தேடிச்சு.
அத பார்த்த திமிங்களமெல்லாம் அத சாப்பிட வந்தது.
சுறா மீன் ரொம்ப பயந்துடுச்சு. யாராவது என்னைய காப்பாத்துங்க யாராவது என்னைய காப்பாத்துங்க
அப்டின்னு கத்துச்சி
அப்ப ஒரு மனுசன் மீன் பிடிக்க வந்தாரு.
அவரு வலைய விரிச்சு சுறாவ (shark) பிடிச்சிட்டாரு.
அப்பறம் அதுக்கு தேவையான மீன் சாப்பிட குடுத்தாரு. ஷார்க் நல்லா சாப்பிட்டது.
திரும்ப சுறாவ கொண்டு போய், சுறா கடல்ல விட்டுட்டாரு.
ஷார்க்கும் ஹேப்பி
மனிதரும் ஹேப்பி..

6 வயது. ஒன்றாம் வகுப்பு படிக்கிறார். அண்ணனைப் பார்த்து தானும் கதை சொல்லத் துவங்கினார். தருண் சொன்ன கதைகள்,ஊஞ்சல் மரம் ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது பெரும்பான்மையான கதைகளின் சாரம் "பசி" யாக இருக்கிறது.




Cute story tharun