பப்புவின் நண்பன்
- ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

- Jan 15
- 2 min read

அழகாபுரம் கிராமத்தில் பப்பு என்ற சிறுவன் வசித்து வந்தான்.எப்போதும் குறும்புத்தனம் செய்தபடியே பல சேட்டைகள் செய்து வருவான். அதனால் மற்ற குழந்தைகளை பப்புவோடு விளையாட அவர்களின் பெற்றோர் அனுப்ப மாட்டார்கள்.
பப்புவின் வீட்டில் தோட்டம் ஒன்று இருந்தது.பப்பு அந்த தோட்டத்தில் தான் எப்போதும் விளையாடுவான் அங்கிருந்த ஒரு மாமரம் தான் பப்புவின் நண்பனாக இருந்தது.அந்த மரத்திடம் பேசி விளையாடுவான் பப்பு.
ஒரு நாள் இரவு நல்லமழைபெய்யதது. மழையோட சேர்த்து இடியும் மின்னலும் வெட்டியது. அந்த கனமழையால் வந்த இடி பப்புவோட நண்பனான மா மரத்தில் விழவும் மரம் சிதைந்துபோனது.
காலையில் தோட்டத்துக்கு சென்ற பப்புவின் அப்பா மரத்தை கண்டதும் வருந்தினார். இனி இந்த மரத்தால் பயனில்லை அதனால் இதை வெட்டிடலாம் என்று நினைத்தார். மரத்தை வெட்ட ஆட்களை வரச் சொன்னார்.
பப்புவுக்கோ ரொம்ப வருத்தமாகிடுச்சு " அப்பா தயவுசெய்து மரத்தை வெட்டாதீங்க. அது என்னோட நண்பன் அத விட்டுட்டுங்கனு".
"தம்பி சொன்னா கேளு இந்த மரத்துல இடி விழுந்துட்டு இனி இந்த மரம் வளராது. இதால நமக்கு எந்த பயனும் இருக்காது .அப்பா உனக்கு இந்த மரத்துக்கு பதிலா வேர மரம் நட்டுவைக்கிறேன் " அப்படினு சொன்னார்.
" இல்லப்பா நீங்க என்ன சொன்னாலும். சரி எனக்கு வேற மரம் எல்லாம் வேண்டாம் எனக்கு இந்த மரம் தான் வேணும்" னு அடம்புடிச்சான் பப்பு.
பப்புவோட அப்பாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனோட அழுகைய பாத்துட்டு இப்ப மரத்த வெட்ட வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்னு முடிவு பண்ணி மரத்தை வெட்ட வந்த ஆட்களைபோக சொல்லிவிட்டார் .
நாட்களும் போச்சு பப்பு தினமும் அந்த மரத்துக்கிட்ட போய் பேசுவதும், அதற்கு தண்ணீர் ஊற்றுவதுமா இருந்தான்.
இடிவிழுந்த மரம் இனி வளராதுனு அப்படினு பப்புவோட அப்பா தினமும் சொல்லிக்கிட்டே இருந்தார்.
சில மாதங்களுக்கு பிறகு மரத்தவெட்ட ஆட்களை கூட்டிக்கிட்டு பப்புவோட அப்பா தோட்டத்துக்கு வந்தாரு. வந்தவர் மரத்த பாத்து பிரமிச்சுபோயிட்டாரு.
அந்த பட்ட மரத்தில் ஆங்காங்கே சில தளிர்கள் துளிர்விட்டு இருந்தது.பப்பு அந்த மரத்திடம் காட்டிய அன்பு துளிராக வெளிப்பட்டிருந்தது.
பப்புவோட அப்பாக்கு தன்னோட கண்ணையே நம்ப முடியவில்லை. மரத்த வெட்ட வந்த ஆட்களை போக சொல்லிவிட்டு அந்த மரத்துக்கு உரம் வைக்க ஆட்களை வர சொன்னார்.
நாம காட்டுற அன்பு பட்ட மரத்தையும் துளிர்க்க வைக்கும் என்பதை பப்பு அப்பா புரிஞ்சிக்கிட்டாரு.

சிறுகதை , கவிதை எழுதிவருகிறார். சிறார்களுக்கான நீரோடை மற்றும் கதைசொல்லப்போறோம் குழுக்களில் கதைசொல்லியாக இருக்கிறார்.
முதல் நூல் நீலனின் பொங்குமாங்கடல் சிறார்களுக்கான நாவல் வெளியாகியிருக்கிறது.




Comments