சனிக்கோளும் எரிகல்லும்
- சு.ரா.கவின்கிருஷ்ணா

- Nov 15
- 1 min read

ஒரு அழகான பூமி இருந்தது
திடீரென்று அந்த பூமியில் வெள்ளம் வந்தது
பூமியிலிருந்து எல்லா மக்களும் ஏவுகணையில் ஏறி சனி கிரகத்திற்குச் சென்றனர்
அப்போது ஒரு சிறுவன் சனியிலிருந்து கீழே விழுந்து விட்டான்
அப்போது ஒரு பெரியவர் அந்த சிறுவனை காப்பாற்றுவதற்கு வந்தார்
அந்த சமயம் ஒரு எரிகல் பூமியை நோக்கி போனது
நீ மட்டும் கீழ விழாம கவனமா இருந்திருந்தா நம்ம எல்லாம் அந்த எரிகல்ல ஏறி பூமிக்கு போய் இருக்கலாம் என்று அனைவரும் அந்த சிறுவனை திட்டினர்.
ஏனெனில் அப்போது பூமியில் வெள்ளம் வடிந்து விட்டது.
ஆனால் அந்த எரிகல் பூமியில் சென்று மோதி வெடித்து விட்டது.
அப்போது அனைவரும் அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள்
"உன்ன தெரியாம திட்டிட்டோம். எங்கள மன்னிச்சிடு.
உன்னால தான் லேட் ஆச்சு. இல்லாட்டி நேரா போய் இந்த எரிகல்ல ஏறி எல்லாரும் அந்த எரிகல்லோட சேர்ந்து வெடிச்சிருப்போம்" என்று அந்த பையனுக்கு நன்றி சொன்னார்கள்.

8 வயது மூன்றாம் வகுப்பு படிக்கிறார். நான்கு வயதில் இருந்தே கதைகள் சொல்கிறார். ஷார்க்கை அடித்த மின்னல், தங்கப்பறவையும் கழுகும், கவின் சொன்ன கதைகள் ஆகிய கதைத்தொகுப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன.




ramkumarnarayanasamy91@gamil.com
மிகவும் அருமையான கற்பனை கவின்