ஓரா மீன்
- நாராயணி சுப்பிரமணியன்

- Nov 15
- 1 min read

இது பவளப்பாறைகளில் வசிக்கும் ஒருவகை மீன். இந்த மீனை மீன் சந்தைகளிலும் நாம் அடிக்கடி பார்க்கலாம். அதிகபட்சம் ஒரு அடி (முப்பது சென்டிமீட்டர்) வரை வளரக்கூடிய இந்த மீன் குடும்பத்தில் மொத்தம் 30 இனங்கள் உண்டு.
பெரும்பாலான மீன்கள் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த மீன்கள் ஆங்கிலத்தில் Rabbitfish என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றின் முகத்தையும் மூக்கையும் ஒன்றாகப் பார்க்கும்போது முயல் போலவே இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

எல்லா ஓரா மீன்களுமே பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை. இரவு நேரத்தில் பவளத்திட்டுகளின் இடுக்குகளில் இவை மறைவாகத் நீந்திக்கொண்டிருக்கும். பெரும்பாலான ஓரா மீன்கள் பாசிகளை உண்ணும் பண்பு கொண்ட தாவர உண்ணிகள்தான். சிலவகை ஓரா மீன்கள் சிறு விலங்குகளைக் கூட சேர்த்து சாப்பிடும்.

இவற்றின் துடுப்புகளில் இருக்கும் முட்கள் மிகவும் கூர்மையானவை. சில முட்களில் நச்சுத்தன்மையும் இருக்கும், ஆகவே இவற்றைக் கையாளும்போதோ தூக்கும்போதோ கவனமாக இருக்கவேண்டும்.
இந்த மீன்களை நீங்கள் சந்தைகளில் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்களேன்.

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர்
பட்டமும் பெற்றவர்.
இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது, எஸ்.ஆர்.வி கல்விக்குழுமத்தின் படைப்பூக்க விருது,பாவை விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். கடலும் மனிதரும், விலங்குகளும் பாலினமும், ஆழ்கடல், சூழலும் பெண்களும், நெய்தல் மீன்கள் உள்ளிட்ட பதினைந்து நூல்களை எழுதியுள்ளார்.




Comments