top of page

வெப்பநிலைமானிகளும் இரு உலோகங்களும்

ree

திரவமாக இருக்கும் ஒரே ஒரு உலோகம் எல்லோரும் அறிந்ததே. அது பாதரசம். இதன் உறை நிலை −39℃ ஆகும். இந்த உறைநிலையே இது பல்வேறு வகை வெப்பநிலைமானிகளில் பயன்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. வெப்பநிலைமானிகளில் பயன்படும் பாதரசத்திற்கு ஒரு முக்கியமான எதிரியென்றால் காலியத்தைக் கூறலாம். காரணம் என்னவென்றால், பாதரசமானது கிட்டத்தட்ட 300℃- இல் கொதிக்கிறது. இதன் காரணமாகவே, பாதரசமானது உயர் வெப்பநிலையை மதிப்பிடப் பயன்படும் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்த இயலாததாய் இருக்கிறது. காலியமானது 2000℃- இல் ஆவியாகத் தொடங்குகிறது.


ree

காலியத்தின் உருகுநிலையோ உள்ளங்கையில் வைத்தாலே உருகிவிடும் வெப்பநிலை. ஆம், காலியம் 29.7℃- இல் உருகி விடும். காலியத்தைத் தவிர எந்த ஒரு உலோகமும் இவ்வளவு நீண்ட வெப்பநிலை இடைவெளியில் திரவமாக இருக்க முடியாது. ஆம். காலியம் 30℃ முதல் 1999℃ வரை திரவ நிலையிலேயே இருக்கக்கூடியது.  இதன் காரணமாகவே உயர் வெப்பநிலைகளை அளக்கப் பயன்படும் வெப்பநிலைமானிகளுக்கு  காலியம் சிறந்த தேர்வாக உள்ளது. 


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
அகமது கனி
Sep 28
Rated 4 out of 5 stars.

வெப்பநிலையை அளக்க மானிகளில் பாதரசம், ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதை அறிவேன்.. இப்போதுதான் காலியம் பயன்படுவது அறிகிறேன்.

Like
bottom of page