top of page

இலண்டனிலிருந்து அன்புடன்


ree

வணக்கம் சுட்டிகளா,


“இயல்” சிறுவர் இதழ் புத்தம் புதிதாய் மலர்ந்துள்ளது.


புதியது என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். அந்தக் கொண்டாட்டத்தில் நானும் உங்களுடன் இணைகிறேன். அதுவும் எங்கிருந்து தெரியுமா? இலண்டனிலிருந்து…


“இங்கிலாந்து சிறுவர் இலக்கியம்” எனும் தலைப்பில் உங்களை நான் ஒவ்வொரு

இதழிலும் சந்திக்க இருக்கிறேன். இலண்டனில் பிரபலமான சிறுவர் புத்தகங்கள்

பற்றித்தான் பேசப் போகிறோம். Virtual Reality கண்ணாடி அணிந்து கொண்டால்

எப்படி இருக்கும்? அப்படிதான் நாம் அனைவரும் ஒன்றாகப் புத்தகங்கள் மூலம்

இலண்டனைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்.


என்ன? புத்தகங்கள் வழியே இலண்டனைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா?

hologauze animations இலண்டனின் மிக முக்கியமான அடையாளம் “தேம்ஸ் நதி”.

திருவிழா, பண்டிகை என எந்த ஒரு முக்கியமான என்றாலும் மக்கள் தேம்ஸ்

நதிக்கரையில் கூடிக் கொண்டாடுவார்கள்.


2025ஆண்டு புத்தாண்டை வரவேற்க சுமார் ஒரு இலட்சம் மக்கள் தேம்ஸ் நதியோரம் கூடினர். பல இலட்சம் மக்கள் நேரலையில் இந்நிகழ்வைப் பார்த்தனர். சரியாக 12மணிக்கு பட்டாசுகளும் டிரோன் விளக்குகளும் இணைந்த வான வேடிக்கை நிகழ்வு தொடங்கியது.


இந்நிகழ்வில்தான் முதன்முதலாக hologauze animations பயன்படுத்தப்பட்டன.

Hologauze animations என்பது புதுவகையான மாய பிம்பங்கள். “London Eye” என

அறியப்படும் மிகப் பெரிய ராட்டினம் உள்ளது. அந்த இராட்டினத்தைச் சுற்றித்தான் 

hologauze animations நடைபெற்றன.


ஆரம்பத்தில்    hologauze  animations மூலம் “Happy New Year” போன்ற  வாழ்த்துச் செய்திகளே இடம் பெற்றன. ஆனால், நிகழ்வின் முடிவில் மாய திரையில் சிறப்பு விருந்தினர் ஒருவர் தோன்றி இன்ப அதிர்ச்சி தந்தார். அவர் யார் தெரியுமா?


இங்கிலாந்தின் பிரதமரோ, மறைந்த எலிசபத் ராணியோ, ராஜா பிலிப்போ,

விளையாட்டு வீரரோ, நடிகரோ, இசைக் கலைஞரோ, விஞ்ஞானியோ அல்ல.

அங்குத் தோன்றியது, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான, சிறார் இலக்கியத்தின் மிக

முக்கிய கதாபாத்திரமான “பேடிங்கடன் கரடி”.


ஆமாம்! பேடிங்கடன் கரடிதான் அன்றைய சிறப்பு விருந்தினர். நாடு, இனம், மொழி, மதம், கலாச்சாரம் என  பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த மக்கள் வாழும் இடம் இங்கிலாந்து. வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாய் வாழும் சூழலை


உருவாக்குவதே இங்கிலாந்து அரசின் நோக்கம். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும்

செய்தியைத்தான் “பேடிங்கடன் கரடி” எனும் சிறுவர் புத்தகம் உலகிற்கு

வழங்கியுள்ளது.


"As we enter the new year, I always remember what Mrs Brown says: in London

everyone is different, but that means anyone can fit in. I think she must be right.

Because although I dont' look like anyone else, I really feel at home. Happy New

Year, Love, from Paddington"


ஆமாம் செல்லங்களா! பேடிங்கடன் கரடி என்பது உலக அமைதியின் அடையாளமாய்

விளங்குகிறது.


சரி! இவ்வளவு முக்கியமான பேடிங்கடன் புத்தகம் குறித்தும், அதன் ஆசிரியரான

மைக்கேல் பாண்ட் குறித்தும்  விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்.


( தொடரும் )


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page