top of page

பாடிக்கிட்டே படிக்கலாம்!

  • Writer: சாலை செல்வம்
    சாலை செல்வம்
  • May 15
  • 2 min read


பள்ளிப் பாடங்கள் இலக்கியமாக இருக்கும்போதும், இலக்கியப் பார்வையோடு பாடங்களை அணுகும்பொழுதும் கற்றல் கற்பித்தலில் வேகம் அதிகரிக்கும். இது ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து அனுபவிக்கக்கூடிய ஒன்று. படங்கள், பாடல்கள், புதிர்கள், கதைகள், படக்கதைகள், உரையாடல், கடிதம், நாடகம் எனப் பல்வேறு இலக்கிய வகைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

மொழி சார்ந்த கற்றலில் அது நேரடியாகச் செயல்பட்டாலும் கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற அடிப்படைப் பாடங்களையும் பாடல்கள், காட்சிகள், கதைகள் என இலக்கிய வடிவங்களில் தர முடியும். அப்படிப்பட்ட பாடங்களை, செயல்பாடுகளை அதிகப்படுத்தி நவீனக் கல்வி முறை தன்னை தகவமைத்துக் கொண்டுவருகிறது. அந்த வகையில் ஆரம்பக் கல்வி தமிழ்ப் பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடல்களைப் பற்றி இந்த முறை பார்ப்போம்.


ஆரம்பக் கல்வியில் தமிழ்ப் பாடமும் பாடல்களும் குழந்தைகளை எப்பொழுதும் மகிழ்விப்பவை. தமிழ் எழுத்துக்களையும்கூட ராக தாளத்துடன் கற்று, மனதில் ஏற்றிக்கொள்பவர்கள் நம் குழந்தைகள். குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இசை இணைந்து பயணிக்கிறது. மொழிப்பாடம் என்பதும் முத்தமிழின் ஒவ்வொரு வகையிலும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையில் பாடல்கள் வெவ்வேறு வகைகளை உள்ளடக்கியுள்ளன.


- குழந்தைகள் தனியாகவும் இணைந்து குழுவாகவும் பாடும்படி உள்ளன.

- அனுபவித்துப் பாடும்படியாக, அவர்களின் வயதுக்கேற்ப புரிந்துகொள்ளும்படியாக இருக்கின்றன.

-

ஒரே இசை வடிவத்தில் இல்லாமல் இசையோடு இணைந்து, நாட்டுப்புற இசை வடிவங்கள் அடிப்படையில், சேர்ந்திசை...எனப் பல்வேறுபட்டு இருக்கின்றன.

-

பாடுவதோடு மட்டுமல்லாமல் ஆடுதல், இசையுடன் இணைத்து ஆடிப்பாடுவதாகவும் உள்ளன.

-

பாடல் படித்தல், பாடல் ஒப்பித்தல போன்ற பழைமை நடைமுறையைக் கடக்க க்யூ.ஆர். கோட் மூலம் பாடல் சென்றுசேர்கிறது. பாடல் என்பது உயிர்ப்புள்ள செயல்பாடாக மாறியிருப்பதை மகிழ்ச்சியான கற்றல் உறுதிப்படுத்துகிறது.

-

ஒவ்வொரு தமிழ்ப் பாடமும் இயற்கை சார்ந்த பாடல்கள், கேள்வி கேட்கும் பாடல்கள், கதைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறார் பாடலாசிரியர்களான அழ. வள்ளியப்பா, பாரதியார், தேசிக விநாயாகம் பிள்ளை போன்றோரின் பாடல்களை உள்ளடக்கியுள்ளன. பாடல்கள்களுக்கு ஏற்ற வண்ண ஓவியங்களும் தேவையாகிறது.

-

பாடப்பொருள், மொழித்திறன் சார்ந்து குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை மாணவர்கள் அடைவதையும் பாடல்கள் மையப்படுத்தியுள்ளன.


இயற்கைப் பாடகள்:

ஆலமரத்தில் விளையாட்டு,

வண்ணத்துப்பூச்சி,

மழை,

அனுபவப் பாடல்கள்:

கைவீசம்மா கைவீசு

அம்மா இங்கே வா வா – மே.வீ.வேணுகோபாலன்

தடதடவென இடி இடிக்குது தாளம் தப்பாமல்

நிலா பாரு நிலா பாரு நீல வானிலே

கண்ணாடி – அழ.வள்ளியப்பா


நாட்டுப்புறப் பாடல்கள்

ஐலசா ஐலசா,

பூனைக்கும் பூனைக்கும்,

அந்துமல்லி பூத்திருக்கு,

முளைப்பாரி பாடல்,

கும்மியடி


கதைப்பாடல்

உப்பு மூட்டை, பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம், சட்டை மேல சட்டை போட்டு என்கிற காவல்காரன் பாடல்

கேள்வி எழுப்பும் பாடல்கள்:

எங்கே போறீங்க?

அச்சுவெல்லம் தின்று பார்த்து, இனிப்பு சுவையைக் கண்டுபிடி?

என்ன வண்ணம் வேண்டும்?

யாரு யாரு யாரு, காரணம் தெரிஞ்சா கூறு கூறு – வையம்பட்டி முத்துசாமி

எதனாலே எதனாலே, எதனால் எதனால் எதனாலே?



மொழியை சொல்லிக் கொடுக்கும் பாடல்கள்:

அதோ பாராய் – அழ.வள்ளியப்பா

பொம்மை, பட்டம் பறக்குது

வண்ணம் தொட்டு

இறகு – அழ.வள்ளியப்பா

அழகுத் தோட்டம்

பூம் பூம் வண்டி வருகுது

ஓடி விளையாடு பாப்பா– பாரதியார்

விந்தை மனிதர்

கடற்கறைக்குப் போகலாம்


கடினமான பாடல்கள்

வெற்றி வேற்கை

நன்னெறி


மேற்கண்ட விதம்விதமான பாடல்களைக் குழந்தைகள் பாடி, ஆடி, இசைத்து, சேர்ந்திசைத்து... என்ற முன்னெடுப்பை பள்ளிகளும் வகுப்பறைகளும் முன்னெடுத்துச் சென்று மாணவர்களின் கற்றலை உறுதிப்படுத்த வேண்டும்.

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page