top of page

சமூக நூலகங்கள்

ree

புதிய சிந்தனை நூலகம்


செப்டம்பர் 5 ம் தேதி தெற்கு ஆத்தூரில் புதிய சிந்தனை நூலகம் எனும் நூலகத் தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

குழந்தை ரதி பிரார்த்தனா (3-ஆம் வகுப்பு) தான் கண்ட சில நூலகங்களைக் கண்டு அதன்படி தங்களது வீட்டிலும் ஒரு நூலகம் வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார்.


அவரது அம்மா வீட்டில் மாலை நேர தனி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அவரிடம் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். அவர்களும் வாசிக்கட்டும், தனது மகளின்

நண்பர்களும் வாசிக்கட்டும் என்ற நோக்கில், தொடங்கப்பட்டது. தசிஎகச முக்காணி கிளை

சுப்புலெட்சுமி, சண்முக வடிவு, தூத்துக்குடி கிளை வாலண்டினா ஆகியோர் சார்பில்

சிறார் புத்தகங்கள் புதிய சிந்தனை நூலகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன.


மகிழினி IFS நூலகம்.


ree

செப்டம்பர் 5 தெற்கு ஆத்தூர் புதிய சிந்தனை நூலகம் தொடக்க நிகழ்வு முடிந்து திரும்பி வரும்வழியில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி முத்து நித்யா, தங்கள் வீட்டிற்கு வரும்படி

அன்புடன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று மகிழ்வுடன் சென்றபோது, தனது சேகரிப்பு புத்தகங்களை பெரும் மகிழ்வுடன் காண்பித்து, தன்னிடம் 33 புத்தகங்கள் உள்ளன,

இதனை வைத்து ஒரு நூலகம் தொடங்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தினார்.

அவரது அம்மாவும் உற்சாகப்படுத்தினார்.


வேகவேகமாக உடனிருந்த குழந்தைகள் அந்தப் புத்தகங்களை ஒரு இரண்டு அடுக்கு சிறிய அலமாரியில் அடுக்கத் தொடங்கினர்.


ஆஹா! அற்புதம்! என்றனர் குழந்தைகள். சரி, இன்னொரு நாள் எதற்கு? இப்போதே நூலகம்

தொட ங்கிவிடலாம் என்று முடிவு செய்து, ஆளுக்கொரு பெயர் சொல்ல, தனக்கு செப்டம்பர் 2ல்

அறிவுச் சுடர் படிப்பகம் சார்பில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த, மகிழினி IFS புத்தகத்தை, அதே புத்தகத்தை இரண்டு பிரதிகள் தனது சேமிப்பு உண்டியல் தொகை மூலம் வாங்கி, தனது பள்ளிக்கும், தனது மாலைநேர தனிபயிற்சி வகுப்புக்கும் பரிசாக அளித்த , தனக்கு மிகவும் பிடித்த அதே மகிழினி IFS எனும் புத்தகத்தின் தலைப்பையே தனது நூலகத்திற்கு சூட்டி மகிழ்ந்தார்

மாணவி முத்து நித்யா.


ஒரு புத்தகப் பரிசு என்ன செய்யும்? ஒரு நூலகத்தையே உருவாக்கும்!


இப்படித்தான் உருவானது மகிழினி IFS நூலகம். இது நமது 12வது நூலகம்.


சமூக நூலகங்கள்.

Community Libraries


1.அறிவுச்சுடர் படிப்பகம்,

நவம்பர் 14 - 2022.

சண்முக வடிவு மற்றும் பலர் இணைந்து...

ஆத்தூர் .


2.அல்முபின் தையல் நூலகம்,

நவம்பர் 14- 2023

செய்யதலி பாத்திமா

ஆத்தூர் .


3.வானவில் நூலகம்,

மார்ச் 8 - 2024

சுப்புலெட்சுமி

முக்காணி.


4.சிறகுகள் சிறார் நூலகம்,

ஏப்ரல் 23 - 2024.

வாலண்டினா

தூத்துக்குடி .


5.அரும்பு நூலகம்,

ஜனவரி 01 - 2025

மரியம் ஆயிஷா

ஆத்தூர் .


6.Rise and Shine Library,

பிப்ரவரி 16 - 2025.

மாணவச் செல்வங்கள்,

மரிய ஸ்டெர்லி & கிரேசி

ஆத்தூர்.


7.பெருங்கனா சிறார் நூலகம்.

பிப்ரவரி 24 - 2025.

ஜோசப் டெரின்

குருவிநத்தம் கிராமம்


8.குரூப்ஸ்கயா நூலகம்

ஏப்ரல் 14 2025

கோமதி அம்மாள்

தோப்பூர்

திருச்செந்தூர்


9.பெனோ ஜெபைன் நூலகம் ,

ஏப்ரல் 23 2025.

சகாயமேரி

காமநாயக்கன்பட்டி.


10.வாசிப்பை நேசிப்போம் நூலகம்

மே 11 2025.

தங்கலெட்சுமி

பூஜாஸ்ரீ, வினோத் குமார்

தெற்கு ஆத்தூர்.


11.புதிய சிந்தனை நூலகம்..

செப்டம்பர் 5 2025.

முத்துலெட்சுமி

ரதி பிரார்த்தனா.

தெற்கு ஆத்தூர்.


12.மகிழினி IFS நூலகம்

செப்டம்பர் 5 2025.

சிவரஞ்சனி

முத்து நித்யா

தெற்கு ஆத்தூர்.


- தொடரும்...

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page