top of page

இருபெரும் விழா

ree

குழந்தைகள் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் (நவம்பர் 7) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும் என தசிஎகச மாநிலத் தலைமையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலினை தொடர்ந்து, நெல்லை மாவட்டக் கிளை சார்பில் ஆசிரியர் திரு. துரை பாண்டியன் அவர்களை (தமுஎகச வி.மு.சத்திரம் கிளை பொருளாளர்) அணுகினோம்.


அரசுப் பள்ளி ஆசிரியரான திரு. துரை பாண்டியன் அவர்கள் பணிபுரியும் அனவரதநல்லூர் அரசுப் பள்ளியில், அழ. வள்ளியப்பாவை நினைவுகூர்ந்து கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, சிறார் பாடல்கள், பேச்சுப் போட்டி என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.


கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும், தமுஎகச (வி.மு. சத்திரம் கிளை) சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இணைந்து இன்று (11.12.2025) பள்ளி வளாகத்தில் இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.


பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கர நாரயணன் அவர்கள் தலைமை தாங்கினார்.


சிறப்பு விருந்தினர்களாக


• தமிழ் எக்கோஸ் திரு. மு. வெங்கட்ராமன்

• தமுஎகச வி.மு. சத்திரம் கிளைத் தலைவர் திருமதி சத்தியா

•சமூக சேவகர் மற்றும் தசிஎகச நெல்லைக் கிளை முன்னாள் செயலாளர் திரு. சுரேஷ்

• தசிஎகச நெல்லைக் கிளைத் தலைவர் திரு. தேவர்பிரான்

ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி நிகழ்வை சிறப்பித்தனர்.


ஆசிரியர் திரு. துரை பாண்டியன் விழா நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.


ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் என மொத்தம் 12 பரிசுகள் தசிஎகச நெல்லைக் கிளை சார்பில் வழங்கப்பட்டன.


தனிச்சொற்பொழிவாக இல்லாமல், மாணவர்களுடன் நேரடியாகப் பேசும் கலந்துரையாடல் முறையில் திரு. வெங்கட்ராமனும் திருமதி சத்தியாவும் நிகழ்வை உயிரோட்டமாக வழிநடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.


இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடைபெற்றது.


மேலும், விழாவின் இறுதியில், இதுபோன்ற கல்வி-கலாச்சார நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துவது குறித்தும், உலகத் திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. (தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இதைப் பின்பற்றி வருகிறது. திரு. வெங்கட்ராமன் இதை ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய முன்னோடி ஆவார்.)


விழாவைத் தொடர்ந்து, நன்செய் நிறுவனத்திலும் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சார்பில் மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


85% பெண் ஊழியர்கள் பணியாற்றும் இந்நிறுவனத்தில், “பெண்கள் ஏன் பாரதியாரை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் நாளைத் தங்கள் கருத்துகளை பகிர வேண்டும் என அறிவுறுத்தி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.


ஏற்றத்தாழ்வுகள் அற்ற, பாகுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்க

குழந்தைகளுடன் தொடர்ந்து பேசுவோம்; கற்போம்; கற்பிப்போம்!

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page