ஈரோட்டில் கதைத்திருவிழா -2025
- சரிதா ஜோ

- Aug 15
- 1 min read

ஈரோடு மாவட்டத்தில் 21 வருடங்களாக புத்தகத் திருவிழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களாக மக்கள் சிந்தனை பேரவை தனியாகவும் கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாடு பொது நூலக துறையோடு இணைந்தும் நடத்தி வருகிறது.

இதில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஆளுமைகளின் சிறப்புரை நடைபெறும். இந்த வருடம் 5 கோடிக்கு மேல் நூல்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு கடந்த வருடம் நடைபெற்றது. இந்த வருடமும் தினமும் காலையிலிருந்து மாலை வரை பல்வேறு பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் கதை கேட்டார்கள்.

கதைக்களம் என்ற ஒரு அரங்கம் அமைத்து அதில் குழந்தைகளுக்கு கதை சொல்லிகள் கதை சொன்னார்கள்.
கதை சொல்லிகள் வனிதாமணி, கோதை, லட்சுமி விசாகன், சரிதா ஜோ, நான்சி கோமகன், சங்கீதா பிரகாஷ், சர்மிளா தேவி, கார்த்திகா கவின் குமார் மற்றும் தீரா தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டு மிகச் சிறப்பான கதைகளைக் கூறினார்கள்.

10 வயதுக்குள் குழந்தைகள் கேட்கும் கதைகள் பிற்காலத்தில் அவர்கள் ஆளுமையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கு கதைகளை கொண்டு சேர்த்த ஈரோடு புத்தக திருவிழா ஏற்பட்டாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.



Comments