top of page

“நான் கதைகளை நேசிக்கிறேன்”

  • Writer: வே சங்கர்
    வே சங்கர்
  • May 15
  • 6 min read

அமெரிக்க எழுத்தாளர் டே கெல்லர், கேட் டி’கமில்லோவிடம்  அவரது புதியநாவலான ”ஃபெரிஸ்” குறித்தும், அவரது எழுத்துகளில் பரவலாகக் காணப்படும் முக்கியமான கருத்துக்கள் குறித்தும் பேசுகிறார் - தமிழாக்கம்: வே.சங்கர்
அமெரிக்க எழுத்தாளர் டே கெல்லர், கேட் டி’கமில்லோவிடம் அவரது புதியநாவலான ”ஃபெரிஸ்” குறித்தும், அவரது எழுத்துகளில் பரவலாகக் காணப்படும் முக்கியமான கருத்துக்கள் குறித்தும் பேசுகிறார் - தமிழாக்கம்: வே.சங்கர்

டே கெல்லர் : வணக்கம். உங்களோடு நான் இந்த நேர்காணலைச் செய்வதற்கு மிகவும் பெருமிதமடைகிறேன். உங்கள் புத்தகங்களை நான் இப்போது மட்டுமல்ல, என் சிறுவயதில் இருந்தே நேசிக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும் போது The Tiger Rising புத்தகத்தை என் வகுப்பு ஆசிரியர் உரக்க வாசித்துக்காட்டிய நினைவுகள் இன்னும் என் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. Despereaux புத்தகத்தை நூலகத்திற்குச் சென்று வாசித்ததும் மறக்கமுடியாத அனுபவம். இப்போது உங்களை நேரில்

சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.


கேட் டி’கமில்லோ: உங்களது வார்த்தைகள் என்னை நெகிழச்செய்கிறது. குழந்தைகளின் புத்தக உலகம் என்பது யாராலும் கற்பனை செய்யமுடியாத

அற்புதமான ஒன்று. ஒரு முறை கேதரின் பேட்டர்சனை சந்தித்தபோது, ’உங்களை நீண்டநாட்களாகப் பார்க்கவே முடியவில்லையே?’ என்று கேட்டேன். அதேபோல, கிரிஸ்டோபர் பால் கர்டிஸை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட உணர்வை ஒருபோதும் மறக்க முடியாது. நாம் அனைவரும் ஒரே நோக்கத்துடன்தான் செயல்படுகிறோம் என்று தோன்றுகிறது. குழந்தைகள் தனிமையை உணராமல் இருக்க வேண்டுமானால் கதைகள் சொல்வதுதான் ஒரே வழி. வாழ்க்கை

கடினமாக இருந்தபோதிலும், நாம் செய்யும் பணி மிகவும் மகத்துவமானது.

உங்களுக்குள் இன்னும் இருந்துகொண்டிருக்கும் சிறுவயதுக்

குழந்தைமைக்கு நன்றி.


டே : உங்களுக்கு, உண்மையிலேயே நான்தான் நன்றி செல்லவேண்டும். இந்த அருமையான பணியில் ஈடுபட்டிருக்கும் மகத்தான மனிதர்கள் மத்தியில் நானும் இருப்பது என் அதிர்ஷ்டம்தான். இதை இறுதியில் கேட்கலாம் என்றிருந்தேன், ஆனால், இப்பொழுதே தொடங்குகிறேன். நீங்கள் முதன்முதலில் Winn-Dixie புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்திற்குப் போய், அப்போது இருந்த உங்களிடம் ஒரு வார்த்தை

சொல்ல வாய்ப்பு கிடைத்தால், என்ன சொல்வீர்கள்?


கேட் : அருமையான கேள்வி. அந்தக் காலத்திற்குப் போவது மிகவும் எளிது என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கதையை எழுதத் தொடங்கும்போது எனக்குள் ஒருவிதமான தெளிவற்ற உணர்வு இருந்தது. பிறகு காலப்போக்கில் ’இதுதான் என் வாழ்க்கையின் உன்னதமான பணி’ என்று புரிந்து கொண்டேன். அப்போது எனக்குள் ஏராளமான ஐயப்பாடுகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கிறது. அந்தக் காலகட்டத்திற்குத் திரும்பிச்சென்று சொல்லவேண்டுமானால், ”இதுதான் உனக்கான சரியான பாதை” என்று சொல்லிக்கொள்வேன்.


டே : மிகவும் அழகாகச் சொன்னீர்கள். உங்கள் இத்தனை கால எழுத்துப்

பயணத்தில், “பொதுவெளியில் எழுத்தாளராகவும், உள்ளார்ந்த பிரபல

இலக்கியப் படைப்பாளராகவும்” இருப்பதை எப்படிச் சமன் செய்கிறீர்கள்?


கேட் : கடந்த வாரம் ஒரு நிகழ்வில் ஒருவர் கேட்டார்: “The Tale of Despereaux என் குழந்தைப் பருவத்தில் என் உயிரைக் காப்பாற்றியது என்று யாராவது சொன்னால் அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்றார். ”அதைப் பற்றி என்னால் யோசித்துப்பார்க்கவே முடியவில்லை.” என்று பதில் சொன்னேன். ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள்

எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன். பிறகு, அந்த கனம் நிறைந்த நிமிடங்களை நான் மறந்துவிடவேண்டும். இல்லையென்றால் மனம் குழம்பிவிடும். இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா!


டே : ஆம். சிறார்களுக்கு எழுதும்போது பொறுப்பு கூடிவிடுகிறது. அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிலநேரங்களில் பயமுறுத்துவதாகவே இருக்கிறது. அவர்களுக்கு எழும் உளவியல் சிக்கல்கள் அனைத்தையும் ஒற்றைப் புத்தகத்தில் தீர்த்துவிடவேண்டும் என்று திணிக்கிறோம். பிறகு எப்படி ஒரு கதையை எழுதுவது?


கேட்: மிகவும் உண்மை. குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகங்களில், ”இதில் என்ன நீதி இருக்கிறது?” என கேட்பது வழக்கம். ஆனால் பெரியவர்களுக்கான எழுத்தாளர்களிடம் இம்மாதிரி அசட்டுத்தனமான கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

நான் குழந்தைகளுக்கு எதையாவது கற்பிக்க முயன்றிருந்தால், நிச்சயம் தோல்வியடைந்திருப்பேன். எனவே, “இந்தக் கதையில், இவ்வுலகில் உள்ள குழந்தைகளை நம்பிக்கையுடன் வாழச் செய்யவேண்டும்” என்று எண்ணிக்கொண்டு எழுதினால், அது நடக்காது. அப்படிச் சிந்திக்கவும் கூடாது. நான் சமீபத்தில் வாஷிங்டனில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். அது மிகப்பெரியதொரு சுமையாக

இருந்தது. அந்தந்த கணத்தில் முழுமையாக இருக்கவேண்டியது அவசியம் என்பதை நான் உணர்வேன். பிறகு விமானத்தில் திரும்பும்போது Colson Whitehead எழுதிய Harlem Shuffle புத்தகத்தை வாசித்தேன். நான் மீண்டும் என் உடலுக்குள் திரும்பிய மாதிரி உணர்ந்தேன். “நீங்கள் உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் எப்போதும்

தனித்துவமானவர்; உங்களுக்கே உரிய சிறப்புகள் உங்களுக்குள் உண்டு. முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; உங்களுக்கே உரிய பிரகாசத்துடன் நீங்கள் ஜொலிப்பீர்கள்.”


டே : “நீங்கள் உங்களுடைய உடலுக்குள் மீண்டும் திரும்பிவந்தேன் என்று சொல்வதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுபோன்ற உணர்வுகளை நானும் மிகத்துல்லியமாக உணர்ந்திருக்கிறேன். எழுத்தாளர் என்ற உண்மையான சுயத்தையும், புத்தக ஆசிரியர் என்ற என் வெளிப்படையான முகத்தையும் தனித்தனியே பிரித்துப்பார்க்கும்போது ’எழுதும் செயலே’ என்னை எனக்குள் திரும்ப அழைத்துவருவதைப் போல உணர்கிறேன். வகுப்பறைப் பாடம் என்ற கோணத்தில் ஒரு விசயத்தை அணுகும்போது உங்கள் புத்தகங்களில் வரும் சொற்கள்தான் எனக்கு நினைவில் வருகிறது. Ferris நான்காம் வகுப்பு ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொண்ட சொற்களை நினைவுகூருகிறாள். அவற்றை தான் புரிந்துகொண்டதைப் போல வாசகருக்கும் கடத்துகிறாள். உங்கள் புத்தகங்கள் குழந்தைகளுக்கு புதிய சொற்களையும் அந்தச் சொற்களின் அர்த்தங்களையும் கற்றுத்தருகின்றன. கதையின் மூலம் நீங்கள் சொல்லவரும் நோக்கம் அதுதான் என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. உங்களது சொந்தவரிகளையே நான்

மேற்கோள் காட்டுவதாகத் தவறாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் சொல்கிறேன்.


‘Ferris மற்றும் Billy எழுத்துக்களையும், வார்த்தைகளின் அர்த்தங்களையும் தேர்வுகளுக்காக படித்து மனப்பாடம் செய்தார்கள். அந்தச் சொற்கள் அவர்களின் மூளை மற்றும் இதயத்தில் நிரந்தரமாக பதிந்துவிட்டன. அவை இப்போது Ferris-இன் சொற்களாகிவிட்டன.’ என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த வரி என்னை மிகவும் ஆச்சரியப்படச் செய்தது. அதனால்தான் இந்தக் கேள்வி என் மனதில் உருவானது. உங்களுக்கு முதன்முறையாக ‘சொற்கள் எனக்கானவை’ என்று உணர்ந்த தருணம்

எப்போது?”


கேட்: “நான் எப்படியாவது விரைவில் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வெறித்தனமாக இருந்தேன். அப்போது, என் மனம் முழுவதும் வேறொரு உலகில் இருந்தது. ’கதைகள்தான்’ எனக்கு மிகவும் அவசியம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்றவுடன் எங்களுக்கு உச்சரிப்புகள் (phonics) கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்கள். என்ன காரணத்தாலோ, phonics என் முளைக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. எனக்கு பயமாக இருந்தது. பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் கதறி அழுதேன். நான் கதைகள் வாசிக்க வேண்டும், ஆனால் இந்தத் எழுத்துக்கள் கொண்டிருக்கும் உச்சரிப்புகள் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன. நான் மிகவும் விரும்பிய வாசிப்பு என்ற அந்த விஷயம் என்னிடமிருந்து விலகிவிட்டது போலவே இருந்தது. என் அம்மா என்னுடைய சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர்.

மிகவும் அன்பானவர். என்னவோ செய்யட்டும் என்று வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஓரமாக நிற்கவில்லை. ”அடடே! இதற்காகவா வருத்தப்படுகிறாய்? நீ எல்லாவற்றையும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வதில் வல்லவளாயிற்றே” என்றார். பிறகு எனக்காக வார்த்தை அட்டைகளைத் (flash cards) தயார் செய்தார். அதன் உதவியோடு சொற்களை மனப்பாடம் செய்து வாசிக்கக் கற்றுக்கொண்டேன். அம்மா

ஏதாவது ஒரு சொல்லை ஃப்ளாஸ் கார்டில் காட்டி முடிப்பதற்குள் நான் சொல்வதில் தேர்ச்சி பெற்றேன். ஒவ்வொரு வார்த்தையையும் என் அம்மா எனக்கு காட்டும் போதெல்லாம் அது ஒரு பரிசு போலவும், ஒரு திறவுகோல் போலவும் இருந்தது.

எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது – நாங்கள் இருவரும் சமையலறையில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்போம். அவர் அந்த அட்டைகளை எனக்கு காட்ட, ‘இவை என்னுடையவை. இந்தச் சொற்களைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்’ என்று என் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்”


டே : நீங்கள் சொன்ன கதையைக் கேட்டவுடன் Ferris புத்தகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நீங்கள் இப்போது சொன்ன கதையும் ஒரு அன்புமிகுந்த கதையே. இது மிகவும் அழகானது மட்டுமல்ல மனித மனதைக் கனிவூட்டுவதாகவும் இருக்கிறது.”


கேட் :“நீங்கள் இப்படி சொல்லும்போது எனக்கு இன்னும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என் அம்மாவுக்கு தெளிவாக நன்றி சொல்ல இயலாமல் போய்விட்டது. அது இன்றளவும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் என்னிடம் என்னென்னவற்றையெல்லாம் பரிசாகக் கொடுத்தார் என்பது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. ஏனென்றால், அவர் எனக்கு என்னவெல்லாம் தேவை என்பதைக் கவனித்துக் கவனித்து நிவர்த்தி செய்தார். அவர் எப்போதும் என்னை ஒரு ‘வாசிப்பவளாகவே’ பார்த்தார். கவனித்தார். நான் வாசிப்பதற்கு ஏற்ற புத்தகங்களை முதன் முதலாக எனக்காக வாங்கித் தந்ததும் அவர் தான்.”


டே : “அந்த மாதிரியானவர்கள் நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த நேர்காணலுக்குப் பிறகு, உடனே என் அம்மாவை அழைத்து நன்றி சொல்லப் போகிறேன்!”


கேட் : “ஆம், கண்டிப்பாக நன்றி சொல்லுங்க!”


டே : “ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதை என்ற கருத்து – நீங்கள் அந்த புத்தகத்தை எழுதுவதற்கு முன்பே நம்பினீர்களா? இல்லையெனில் எழுதிக் கொண்டிருக்கும்போது அது உங்களுக்குள் வந்ததா?”


கேட் :: “நீங்கள் கேட்கும் விதமே எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதனால் நாம் நண்பர்களாக இருக்கவேண்டும் போலிருக்கிறது!”


டே : [வாய்விட்டுச் சிரிக்கிறார்]


கேட் : “எனக்கொரு சிறந்த தோழி இருக்கிறாள், நாங்கள் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம். அவளுக்கு 2019 டிசம்பர் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அது என் அப்பாவின் பிறந்தநாளாகும். ஆனால், அவர் அதே ஆண்டின் நவம்பரில் இறந்துவிட்டார். 2020 ஜனவரி 1ஆம் தேதி, அந்தக் குழந்தையின் புகைப்படங்கள் என்

கைபேசியில் வந்தன. அந்தக் குழந்தையின் பெயர் Rainy. அந்தக் குழந்தை அன்பு நிறைந்த உறவினர்களால் சூழப்பட்டிருந்தாள். அம்மா, அப்பா, இரண்டு பாட்டி-தாத்தாக்கள்...” அப்போது, நான் என்ன நினைத்தேன் என்றால், ‘இவ்வளவு பாசத்துடன் வாழ்த்துகள் சொல்லப்பட்ட ஒரு குழந்தையின் வாழ்கையை மையமாகக் கொண்டு ஒருகதையைத் தொடங்கினால் எப்படி இருக்கும்?’ ஏனென்றால் நான் எழுதிய எந்த

கதையிலும் இப்படியொரு தொடக்கம் இருக்கவே இல்லை. அதே நேரத்தில் என் அப்பா என்னுடைய நினைவில் இருந்தார். அவர் மிக மோசமான, துயரமிக்க சிறுவயதைக் கொண்டவர். அவர் நிச்சயம் பாராட்டத்தக்கவர்தான். எங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. அது மிகவும் மோசமாகவே இருந்தது. அவர் இவ்வுலகை விட்டு சென்ற நேரத்தில், அந்தக் குழந்தை இந்த

உலகில் வந்திருக்கிறாள். நான் என்ன நினைத்தேன் என்றால், ‘ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அன்பு நிரம்பி வளர்கிறாள் என்ற இடத்திலிருந்து கதை எழுதினால் எப்படி இருக்கும்?’ அதுவே என் கதையின் தொடக்கம். அன்பு மையமாக இருந்தது. பிறகு, ஒவ்வொரு தடைகளையும் நான் விலக்கியபடியே சென்ற பிறகு, கதையில் உள்ள

பாட்டி Charisse சொல்வதைப் பாருங்கள்: ‘ஒவ்வொரு கதையும் ஒரு அன்புக் கதையே’. நான் உருவாக்குகிற கதாபாத்திரங்கள் என்னைவிட புத்திசாலிகள். காரணம், இது உண்மையாகவே நிகழ்கிறது. ஒவ்வொரு நல்ல கதையும் ஒரு அன்புசூழ் கதையாகத்தான் பரிணமிக்கிறது.”


டே : “நீங்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது எனக்கு உடல் முழுக்க புல்லரிக்கிறது. இப்போது, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றியும் பேச ஆசையாக இருக்கிறது. உங்கள் எல்லா கதைகளிலும் வரும் கதாபாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் இருந்தாலும், அவை எல்லாம் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமானவர்களாக இருந்தாலும், அவை கேலிச்சித்திரங்களில் உள்ள கதாபாத்திரங்களைப்போல ஆகிவிடுவதில்லை. நீங்கள் கதாபாத்திரங்களை உருவாக்கும்போது என்ன செய்கிறீர்கள்?”


கேட் : கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க நான் பெரிதும் மெனக்கெடுவதில்லை. நான் கதாப்பாத்திரங்களைத் தேடுகிறேனோ இல்லையோ, உண்மையில் அவைகள் என்னைக் கண்டடைந்துவிடுகின்றன. கேலிச்சித்திரம்போல நான் அவைகளை

உருவாக்கும் நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடுதான் நடக்கிறேன். அது மிகப்பெரிய சவால். ஆனால், உருவாக்கியபிறகு அதை என்ன செய்யவேண்டும் என்று எனக்கே தெளிவாகத் தெரிவதில்லை. அது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ஒருசிலர் கேட்பார்கள், “நீ எப்போ பெரியவர்கள் வாசிக்க ஒரு புத்தகம் எழுதப்போறே? என்று. அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். நான்

இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வேன். ஏனென்றால், குழந்தைகளுக்கு எழுதும் புத்தகங்களின் மீது எனக்குத் தீராத மயக்கமுண்டு. அது நேரடியாகத் தெரியாது. ஒரு விசித்திரமான அழகு மிதந்து செல்வதைப் போல ஓரக்கண்களால் பார்க்கும்போது தெரியும். அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அது Katherine Paterson சொன்னது போல: ‘நம்பிக்கையான முடிவைத் தரவேண்டியது நம் கடமை. எழுதும்போது எதிர்பாராதவிதமாக வந்துசேரும் ஒரு சில வித்தியாசமான

கதாபாத்திரங்கள், என் உள்ளத்தில் உண்மையாகவே வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நம்பிக்கை பயணத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். ஏனெனில், நம்முடைய ஒற்றுமையை உணரும்போதுதான், நம்பிக்கைக்கான ஒரு இடம் உருவாகிறது. இதுதான் புத்தகங்கள் செய்யும் அற்புதம். “புத்தகங்கள் உன்னை யாரோ உண்மையில் பார்க்கிறார்கள் என்று உணரச்செய்கின்றன. அதே நேரத்தில், நீயும் பிறரை எப்படிப்

பார்க்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கின்றன”.


ஆசிரியர் குறிப்பு:


கேட் டி’காமில்லோ (Kate DiCamillo) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர். 2014 – 2015- ஆண்டுக்கான (National Ambassador for Young People & Literature) அமெரிக்க சிறார் இலக்கிய தூதராக நியமிக்கப்பட்டார்.


தன் எழுத்துக்களின் மூலம் குழந்தைகளின் பழக்கவழக்கங்களை, நுண் உணர்வுகளை, வாழ்க்கை மீதான பார்வைகளைக் கதாபாத்திரங்களின் வழியாகவும், உருக்கமான உரையாடல்கள் மூலமாகவும், குழந்தைகளின் உலகத்தை உணர்த்தும் வகையிலும் கற்பனைக் கதைகளைப் படைப்பதில் வல்லவர். மார்ச் 25, 1964ல் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் பிறந்த இவர், சிறுவயதின் பெரும்பாலான காலத்தை ஃப்ளோரிடா

மாகாணத்தில் கழித்தவர்.


Because of Winn-Dixie (2000) இவரது முதல் நாவல். ஒரு சிறுமிக்கும், அவளால் அழைத்துச்செல்லப்படும் ஒரு நாய்க்கும் இடையே உருவாகும் நட்பு பற்றிப் பேசும் இந்நாவல் Newbery Honor விருதைப் பெற்றது. The Tale of Despereaux (2003), Despereaux என்ற பெயர்கொண்ட ஒரு

சிறிய சுண்டெலி பற்றிய நாவல். இந்நாவல் தைரியம், பாசம், மற்றும் ஒரு அரண்மனை உலகத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருது பெற்றது.


Flora & Ulysses (2013) என்ற நாவல் Flora என்ற சிறுமியும் ஒரு சக்திவாய்ந்த ardent சிட்டுக்குருவி மற்றும் Ulysses இடையே நடக்கும் அதிசய அனுபவங்களைப் பற்றியது. இந்நாவல் ஒரு காமிக்ஸ் பாணியில் எழுதப்பட்டது. இந்நாவல் Newbery Medal விருதை மீண்டும் வென்றது.

The Miraculous Journey of Edward Tulane (2006) என்ற நாவல் porcelain rabbit எட்வர்ட் டுலேனின் பயணத்தைச் சொல்வது. இந்நாவல், பயணத்தின் வழியே அன்பு, பாசம், இழப்பு, தியாகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. Raymie Nightingale (2016) என்ற நாவல் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் ஏக்கம், நண்பர்களுடன் வளர்கின்ற உறவுகள் பற்றி அழகாகச்

சொல்கிறது.


கேட் டி’காமில்லோவின் எழுத்துக்களில் அன்பு, நம்பிக்கை, நகைச்சுவை இவை மூன்றும் எல்லா இடங்களிலும் பிரதானமாக வெளிப்படுகிறது).


டே கெல்லர் (Tae Keller) அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எழுதிய கதைகளில் பெரும்பாலும் இரட்டைக் கலாச்சாரப் பின்னணியை மையமாகக் கொண்ட சிறுமிகள், தங்களது தனித்துவமான அடையாளத்தைக் கண்டறிய முயல்வதைப்பற்றியதாக இருக்கிறது.


இவரது ’When You Trap a Tiger (2020)’ என்ற நாவல் ஒரு இரட்டை கலாச்சார வாழ்வைக்கொண்ட சிறுமி லில்லி மற்றும் அவரது கொரிய பாட்டி இடையிலான உறவைப் பற்றியது. கொரிய நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தப்பட்ட இக்கதை, 2021ஆம் ஆண்டு Newbery

Medal விருதைப் பெற்றது.


The Science of Breakable Things (2018) என்ற இந்தக் கதை, ஒரு சிறுமி தனது தாயின் மனநலக் குறைபாட்டை புரிந்துகொள்ள முயற்சிக்கும் பயணத்தை விவரிக்கிறது. இது 2018ஆம் ஆண்டின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.


Jennifer Chan Is Not Alone (2022) என்ற இவரது நாவல், சமூக ஒதுக்கீடு மற்றும் நட்பின் முக்கியத்துவத்தைப் பற்றியதாக இருக்கிறது.


நன்றி – School Library Journal

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page