top of page

ஏழு ஹைக்கூ

ree

நகரமெல்லாம் திரிந்த குருவிக்கு

இளைப்பாறக் கிடைக்கவில்லை

காடு


*


அம்மா கால் பித்த வெடிப்பு 

பாசத்தின் பள்ளத்தாக்கு,

கற்துகளும் விரும்பி உட்புகும்


*


ஊரை காக்க விரும்பும் அய்யனார்  

எல்லையை தாண்டி

 ஊருக்குள்ளே வாழ விரும்பாதவர்.

 

*


நீருக்கும் மனிதன்மேல் பயம்,

சருவலைக்காரணம் காட்டி, 

கடலை அடைகிறது


*


நரியின் குழியில் விழுந்த

புலிக்கூட்டம்

 இன்னும்  இழக்கவில்லை வீரத்தை

(இலங்கை சம்பவத்தின் அடிப்படையில்) 



*


புத்தகத்தை புரட்டிடும்

மனிதன் இருவிரலால் 

தன் வாழ்வையே புரட்டுகிறான்.


*


யானையைகாட்டிலும்

மனிதனிடமே அதிகம் உள்ளது

மதம்.


எழுதியவர்:


ஹ. சக்திவேல்,

11ஆம் வகுப்பு,

இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம்.

8015626376


1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jun 18
Rated 5 out of 5 stars.

சிறப்பு. நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதவும்.

Like
bottom of page