வெல்லம் தின்னால் ஜாலி (நட)
- சாலை செல்வம்

- Dec 15, 2025
- 1 min read

1
மேல ஏறுனா மலை
கீழ விழுந்தா மழை
2
வெல்லம் தின்னால் ஜாலி
வெள்ளம் வந்தால் காலி
3
கொழம்புல கொதிக்குது கோழி
கூட்டமாய் ஆடலாம் கோலி
4
நிறைய தின்னு பழம்
அப்பதான் கிடைக்கும் பலம்
5
நாரை மூக்கு அலகு
நாந்தான் எப்பயும் அழகு
6
பாதியா பிச்சா அரை
படுத்துத் தூங்குவது அறை
7
சுவற்றில் போவது பல்லி
படிக்கப் போனா பள்ளி
8
மனுசனுக் கிருப்பது தலை
மரத்தில் இருப்பது தழை
9
விட்டெறிவது கல்
ஊத்திக் குடிப்பது கள்

பெண்ணியலாளர், கல்வியியலாளர்,
30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி உரிமை, மாற்றுக்கல்வி குறித்து பல நூல்களை எழுதியிருக்கிறார்.
புனைவு, மொழிபெயர்ப்பு, கட்டுரை, குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.




Super
குழந்தைகள் சொற்களை பிரித்து அறிந்து கொள்ள ஏற்ற எளிமையும் இனிமையும் நிறைந்த பாடல் .சாலை செல்வத்துக்கு நன்றியும் வாழ்த்தும்