பள்ளிக்குப் போகலாம்!
- மாலதி

- Nov 15
- 1 min read

1.
பள்ளிக்குப் போகலாம்!
புத்தகங்கள் படிக்கலாம்!
ஏனென்று கேள் நீ!
பதில் தரும் கல்வி!
பாடல் வழிச் சொல்லி
பலதும் கற்கச் செல் நீ!
2.
அகரம் கற்கத் தொடங்கு!
ஆகச் சிறந்த அமுது!
அறிவை வளர்க்கும் கல்வி!
ஆதாரமே உணர் நீ!
இறகை விரிக்க அறிந்து
பறந்து வானில் பழகு!
3.
கற்றலிலே இன்பம்!
கற்போமே என்றும்!
எழுதப் படிக்கப் பேச
முனைவோமே கற்க!
அறவழியே நிற்க
இன்றே செல்வோம் கற்க!
4.
சிந்திக்கத் தொடங்கு!
சிறிதாகத் தொடங்கு!
இருக்கும் நம் உலகில்
இன்று என்ன புதிது?
அறிவியலைப் படித்தால்
அறியலாம் புதிது!
5.
பள்ளி செல்ல விரும்பு!
பாடம் இனிக்கும் கரும்பு!
கற்றல் என்பது எளிது!
கற்போம் அதனை உணர்ந்து!
சிற்பம் போல நம்மைச்
செதுக்கும் உளி கல்வி!




எளிதாக மற்றும் கனமற்றச் சொற்களால் அமைக்கப்பெற்றுள்ள இப்பாடல் தென்றலில் தவழும் இறகு போன்று மிக இலகுவாக உள்ளது.. குழந்தைகள் இராகம் போட்டு அழகாகப் பாடும் வகையில் அமைத்திருக்கிறார் பாவலர்.
சிறப்பு.