top of page

நெல்லிக்காய்


அழகு குண்டு நெல்லிக்காய் !

மெழுகு பளிங்கு நெல்லிக்காய் !


வெளிர் பச்சை நெல்லிக்காய் !

களிப்பாய் உண்ண நெல்லிக்காய்!


அரிஅரியாய் நெல்லிக்காய் !

எளியோர் ஆப்பிள் நெல்லிக்காய்!


சாறு குடிக்க நெல்லிக்காய் !

சாதம் செய்ய நெல்லிக்காய் !


சத்து நிறைந்த நெல்லிக்காய் !

ரத்தம் கூட்டும் நெல்லிக்காய் !


தித்திக்கும் நெல்லிக்காய் !

தினமும் தின்ன நெல்லிக்காய் !


கமலா முரளி
கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப்

படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட்

காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை,

மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர்,

கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற

இதழ்களில் வெளிவந்துள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page