கிராமத்து விடுகதைப்பாட்டு
- குருங்குளம் முத்துராஜா

- Jan 15
- 1 min read

தாரைத்தொட்டேன் ஒட்டுல
சீப்பை எடுத்தேன் சீவுல
ஒன்னைப்பிய்ச்சேன் எதிர்க்கல
தோலை உரிச்சேன் அழுவுல - அந்த
வாழைப்பழம் திகட்டுல!
2.பெயரும் வினையும்
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டுக்கொடியை நாட்டு
காட்டு காட்டு காட்டு
காட்டு யானையைக் காட்டு
பூட்டு பூட்டு பூட்டு
பூட்டை நல்லா பூட்டு
தட்டு தட்டு தட்டு
தட்டில் தாளம் தட்டு
கட்டு கட்டு கட்டு
கட்டுக்கட்டா கட்டு
சொல்லு சொல்லு சொல்லு
நல்ல சொல்லை சொல்லு
அடுக்கு அடுக்கு அடுக்கு
அடுக்கு அடுக்கா அடுக்கு
முறுக்கு முறுக்கு முறுக்கு
முறுக்கி சுட்ட முறுக்கு
ஓடு ஓடு ஓடு
ஓட்டு வீட்டுக்கு ஓடு
ஏழை படும்பாடு - அதை
உடைத்தெறிய பாடு

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.
இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024
கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது
தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.




Comments