கதைகள் வாழ்க்கையை மாற்றும் - கில் லூயிஸ் (Gill Lewiss)
- உதயசங்கர்

- 10 hours ago
- 2 min read

ஒரு கால்நடை மருத்துவரும் புகழ்பெற்ற குழந்தைகள் எழுத்தாளருமாவார்.
அவருடைய முன்பைய நூல்களில் One White Dolphin மற்றும் Wild Wings (இரண்டும் Atheneum வெளியீடுகள்) அடங்கும். இந்நூல்கள் இரண்டும் Green Earth Book Award விருதைப் பெற்றவை. அவர் தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் வசிக்கிறார். அவர்களிடம் பல செல்லப்பிராணிகள் உள்ளன; அவற்றில் ஒரு மீட்கப்பட்ட Shetland குதிரையும் உள்ளது.
1. நீங்கள் எழுத்தாளராக ஆக எது உங்களைத் தூண்டியது?
நான் சிறு வயதிலிருந்தே கதைகள் எழுத மிகவும் விரும்பினேன். ஆனால் எனது கையெழுத்து சீரற்றதாகவும், எழுத்துப் பிழைகள் அதிகமாகவும் இருந்ததால், நான் எழுத்தாளராக முடியாது என்று நினைத்தேன். நான் அறிவியல் படித்து பின்னர் கால்நடை மருத்துவரானேன். இருந்தாலும் கதைகளுக்கான ஆர்வம் எப்போதும் இருந்தது. என் குழந்தைகளுக்கு கதைகளைப் படித்துக் காட்டத் தொடங்கியபோது, மீண்டும் கதைகள் சொல்லுவதில் காதல் ஏற்பட்டது. நாம் அனைவரும் கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் உடையவர்கள்—அதுவே நம்மை மனிதர்களாக ஆக்குகிறது.
2. உங்களைப்பற்றி மக்களுக்குத் தெரியாத ஒரு விஷயம்?
என்னால் ஆந்தைகளை அழைக்க முடியும்.
3. எழுத்தாளராக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆர்வம்?
கதைகள் மனிதர்களின் மனதையும் எண்ணங்களையும் மாற்றும் சக்தி கொண்டவை என்று நான் நம்புகிறேன். அவை உலகத்தையும் மாற்ற முடியும். கதைகள் மனிதர்களுக்கிடையிலான சுவர்களை உடைத்து, புரிதல் மற்றும் இரக்கத்தை உருவாக்குகின்றன. என் பல புத்தகங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றி பேசுகின்றன. என் கதைகள் வாசகர்களின் வாழ்க்கையை மாற்றியதாக அவர்கள் எழுதிய கடிதங்களை வாசிக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
4. உங்களுடைய ஒரு சாதாரண வேலை நாள் எப்படி இருக்கும்?
எனக்கு ஒரு நிரந்தர நாள் இல்லை! நான் ஒரு புத்தகத்தில் பணியாற்றும்போது, காலை 9 மணி முதல் 1 மணி வரை எழுத முயற்சிப்பேன். முதல் வரைவை எழுத மன அமைதி அவசியம். எழுதுவது நன்றாக சென்றால் நேரம் விரைவாக போய்விடும். எழுத முடியாதபோது நேரம் மிகவும் மெதுவாக நகரும்; அப்போது நான் காபி குடிப்பதும் சிறிய வேலைகளையும் செய்வேன். பிற்பகலில் நிர்வாக வேலைகள் செய்வேன். மாலை நேரம் குடும்பத்திற்காக இருக்கும். சில சமயம் நீண்ட நாட்கள் எழுதாமல் இருப்பேன்; சில சமயம் கடைசி தேதிநெருங்கிவிட்டால்அதிக நேரம் உழைக்கவேண்டியதிருக்கும். .
5. உங்கள் கதைகளுக்கான யோசனைகள் எங்கிருந்து வருகின்றன?
யோசனைகள் எங்கிருந்தும் வரலாம். A Story Like the Wind என்ற கதை மங்கோலிய நாட்டுக் கதையிலிருந்து தொடங்கியது. பின்னர் ஒரு சிரிய இளைஞனின் உண்மை வாழ்க்கை அனுபவம் அதை விரிவாக்கியது. இசையும் கதைகளும் மனிதர்களை இணைக்கின்றன.
6. ஒரு புத்தகத்தைத் தொடங்குவதற்கு முன் எவ்வளவு ஆய்வு செய்வீர்கள்?
நான் நிறைய ஆய்வு செய்கிறேன், குறிப்பாக விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கதைகளுக்கு. நான் அந்த இடத்திற்குச் செல்ல முடியாவிட்டால், அங்கு வாழும் மக்களுடன் பேசுவேன். ஒரு கதையை வாசகர்களுக்கு நன்றாக உணர வைக்க முயற்சிப்பேன்.
7. புதிய கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு உந்துதல் எங்கிருந்து கிடைக்கிறது?
எனக்கு சரியாகத் தெரியாது. கதைகள் என்னைத் தேடி வரும் போல உணர்கிறேன். சில நேரங்களில் ஒரு கதாபாத்திரம் என் மனதில் தெளிவாக தோன்றும்; அதன் பின்னர் அதன் கதையை எழுதத் தொடங்கிவிடுவேன்.
8. நீங்கள்ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடும் செயல்முறை எப்படி இருக்கும்?
ஒரு யோசனை உருவாவது மிகவும் அழகான தருணம். அதன் பிறகு முதல் வரைவை எழுதுவது கடினமான வேலை. நான் பல முறை திருத்தி எழுதுவேன். பின்னர் ஆசிரியருக்கு அனுப்புவேன். ஆசிரியர் கருத்துக்கள் வழங்குவார். மீண்டும் திருத்தம் செய்யப்படும். அதன் பிறகு எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்படும். இறுதியில் 9–12 மாதங்களில் புத்தகம் வெளியிடப்படும்.
9. உங்கள் வாழ்க்கையில் முக்கியமான சாதனை என்ன?
என் புத்தகங்கள் வாசகர்களின் எண்ணங்களை மாற்றியதாக அவர்கள் எழுதும் கடிதங்கள் கிடைப்பதே மிகப் பெரிய சாதனை.
10. குழந்தைகள் உங்கள் புத்தகங்களில் இருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நாம் அனைவரும் இந்த பூமியின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அதை பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது.





Comments