top of page

கல்வி தந்த வெளிச்சம்!


கால் செருப்பு போடக்கூட

கட்டுப்பாடு விதிச்சாங்க!

கல்லு முள்ளு குத்துனாலும்

நடக்கச் சொல்லிச் சிரிச்சாங்க!

 

தோள் துண்டை இடுப்பில் கட்டி

தூரநிக்கச் சொன்னாங்க!

ஆளைப்பார்த்துப் பிரித்துப் பேசி

அடிமையாக்கி வச்சாங்க!

 

காலம் இன்று மாறிப்போச்சு

கல்வி கண்ணைத் திறந்துடுச்சு!

தாத்தா காலத் துன்பங்கள்

தவிடு பொடி ஆகிப்போச்சு!

 

பழைய சாதிப் பேய்களும்

பறந்து போச்சு தூரமே!

உலகம் இப்போ நமக்காக

உறவாய் நிற்குது அருகிலே!

கொ.மா.கோ.இளங்கோ
கொ.மா.கோ.இளங்கோ

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page