சூரியன் மாமா - ராணி குணசீலி
- ராணி குணசீலி
- Aug 15
- 1 min read

சூரியன் மாமா சூரியன் மாமா
சூடா இருக்கீங்க
நானே செய்த மேங்கோ ஐஸ்கிரீம்
சாப்பிட தரட்டுமா.?
சூரியன் மாமா சூரியன் மாமா
அனலா இருக்கீங்க
நானே செய்த ரோஸ் மில்க் கொஞ்சம்
குடிக்க தரட்டுமா.?
சூரியன் மாமா சூரியன் மாமா
வெயிலில் இருக்கீங்க
நானே செய்த குல்பி ஐஸ்
சாப்பிட தரட்டுமா
ஆகா ஆகா நிறைய தந்தா
விரும்பி உண்பேனே.
குளுகுளு குளுன்னு ஆவேன்
குட்டிசெல்லம் உன்னாலே




Comments