குட்டி சுட்டி பூனை - ராணி குணசீலி
- ராணி குணசீலி
- Aug 15
- 1 min read

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மிரண்டு ஓடும் பூனைக்குட்டி
குட்டிக்கரணம் போட்டு தான்
குறும்பு செய்யும் பூனைக்குட்டி
கண்ணை உருட்டி உருட்டியே
காலைச் சுற்றும் பூனைக்குட்டி
வாலை ஆட்டும் பூனைக்குட்டி
பாலை குடிக்கும் பூனைக்குட்டி
தாவி மடியில் ஏறியே
தலையைச் சாய்க்கும் பூனைக்குட்டி
அடுக்கி வைத்த பொருட்களை
இழுத்துப் போடும் பூனைக்குட்டி




Comments