ஒரு மாலை நேர விளையாட்டு - பாவண்ணன்
- பாவண்ணன்

- Aug 15
- 1 min read

தென்னந்தோப்பு பாதையிலே
சிறுவன் ஒருவன் சென்றானாம்
சிதறிக் கிடந்த குறும்பிகளை
உருட்டித் தள்ளி மகிழ்ந்தானாம்
குட்டை மரத்தின் அருகினிலே
உடைந்த பானையைப் பார்த்தானாம்
அழுக்குப் போக துடைத்தானாம்
ஆகா தொட்டி, என்றானாம்
இடுப்பில் வைத்துப் பார்த்தானாம்
ஆகா கூடை என்றானாம்
தலையில் கவிழ்த்து நடந்தானாம்
ஆகா தொப்பி என்றானாம்
தொப்பி தொப்பி தொப்பியென்றே
சொல்லிக்கொண்டு நடந்தானாம்
மிடுக்கைக் கூட்டி நடந்தபோது
தடுக்கி கீழே விழுந்தானாம்
தொப்பிப் பானை நொறுங்கிவிட
சோர்வில் துவண்டு நின்றானாம்




Comments