மாறாத உலகு

மின்னல் வெட்டி வானம் கிழியாது! – பெரும்
நிலவு மண்ணில் இறங்கி ஒளியாது!
வெள்ளம் வந்து மலைகள் கரையாது! – கடல்
அலைகள் மோதி கரையும் தகராது!
பறவை பறந்தால் வானுக்கு வலிக்காது! – பழுத்த
பழங்கள் விழுந்தால் நிலமும் வெடிக்காது!
நெருப்பில் சுட்டாலும் தங்கம் அழியாது – ஓயா
நீலக் கடலலைகள் தூங்கி விழாது!
இரவு வந்தாலும் சூரியன் மடியாது – சுடர்
இறைக்கும் விண்மீன்கள் கீழே விழாது!
ஏழை வீட்டில் கர்வம் நுழையாது – என்றும்
எளியவர் நெஞ்சில் பகை வளராது!

எம்பதுக்கும் அதிகமான சிறார் புத்தகங்களை எழுதியவர். அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பாடல்கள் என சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஜிமாவின் கைபேசி, சஞ்சீவி மாமா, பச்சை வைரம், வாசிக்காத புத்தகத்தின் வாசனை, சுழற்காற்றாக வந்த சிறுவன், மந்திரக் கைக்குட்டை, சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, மலைபூதம் வாய்பிளந்த மர்மம் போன்றவை அதில் அடங்கும். சிறந்த குழந்தை எழுத்துக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர்.இவரது நூல்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகள் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.






Comments