மகிழ்ச்சி
- குருங்குளம் முத்துராஜா

- 1 day ago
- 1 min read

மகிழ்ச்சி இருக்குது மனசுக்குள்ள!
சோப்பு டப்பாவும் செல்போன் ஆகும்
எங்க கையிலே - அதில்
செல்பி எடுத்து சிரிச்சுக்குவோம்
பிள்ளைங்க நாங்க!
மழை பெஞ்சா சேமை இலையை
குடையா பிடிப்போம் !
முழுதாக நனைந்தபடி
வீடு சேருவோம் !
வெறுங்கையில் ஸ்டீரிங் பிடித்து
காரும் ஓட்டுவோம் .
வீல் இல்லாத காருக்கு
பிரேக்கும் போடுவோம் !
சின்ன சொப்பில் சோறு ஆக்கி
விருந்தே வைப்போம்.
இலை தழையை பிச்சுப்போட்டு
கூட்டும் சமைப்போம்.
வாளி மணலில் மாடி வீடு
கட்டி எழுப்புவோம்!
வாசலிலே அழகான
கோலம் போடுவோம்.
இல்லேன்னு சோர்ந்து போய்
உட்கார்ந்ததில்லை.
மகிழ்ச்சி எல்லாமே இருக்குது
எங்க மனசுக்குள்ள!

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.
இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024
கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது
தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.





Comments