வானவில்
- கமலா முரளி

- 17 hours ago
- 1 min read

மாலை நேரத்து வானத்திலே
மஞ்சள் சூரியன் ஜொலிக்கிறதே !
மெல்ல மெல்ல கருமேகக் கூட்டம்
திரண்டு திரண்டு வருகிறதே !
சின்ன சின்னப் பனித்துளியாய்
மழைத்தூறல் தெறித்தே விழுகிறதே !
ஆஹா ! ஆஹா ! மழையினிலே
ஆட்டம் போட்டால் ஆனந்தமே !
மின்னல் வருமோ ? இடி வருமோ?
இன்னும் பலத்த மழை வருமோ ?
பார் ! பார் ! அதிசயம் வானத்திலே !
ஏழு வண்ணத்தில் வானவில்லே !
வளைந்து விரியும் வானவில்லை நான்
வரைந்தே பார்ப்பேன் வண்ணங்களால் !

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப்
படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட்
காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை,
மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர்,
கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற
இதழ்களில் வெளிவந்துள்ளன.





சிறப்பு 💐