ஐயங்கள்
- பாவண்ணன்

- 1 day ago
- 1 min read

அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே
மீன்கள் இருக்குமா?
ஆழத்திலே இறங்கி நின்றால்
காலைக் கடிக்குமா?
அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே
ஓடம் போகுமா?
அக்கரைக்கும் இக்கரைக்கும்
மிதந்து போகுமா?
அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே
முத்து இருக்குமா?
ஆழத்திலே மூழ்கிப் பார்த்தால்
கைக்குக் கிடைக்குமா?
அம்மா அம்மா ஆற்றுக்குள்ளே
முதலை இருக்குமா?
அகலமாக வாயைத் திறந்து
விழுங்கப் பார்க்குமா?

இயற்பெயர் பாஸ்கரன். கர்நாடகத் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, குழந்தை இலக்கியம் என எல்லா தளங்களிலும் தனித்தன்மையோடு இயங்கி வரும் முக்கியமான படைப்பாளி. 'யானை சவாரி', 'மீசைக்கார பூனை', 'எட்டு மாம்பழங்கள்' ஆகியவை இவரது குழந்தைப்பாடல் நூல்கள்.





Comments