அறிவியல் அற்புதம்!
- கோவி.பால.முருகு
- Jul 15
- 1 min read

அறிவியல் தந்திடும் அறிவை -மூளை
அடைந்திடும் சிந்தனைச் செறிவை!
அறிவால் பெருகிடும் நிறைவை-நாடு
அடைந்திடின் பெறாது குறைவை!
பற்பல அதிசயம் நிகழ்த்திவை- அதைப்
பார்த்தே உலகம் வியக்கவை!
கற்றிட அறிவியல் நடத்திவை-அதைக்
காலம் வாழ்த்த படைத்துவை! .
கணினி கைப்பேசிப் பயனில்வை -அதால்
கற்றல் திறத்தைக் கையில்வை!
செயற்கைக் கோள்களை மிகுத்துவை -நாடு
செழிப்பாய் மாறிட அதுதேவை!
சிந்தனைச் செய்வதை அறிவில்வை -அதைச்
செய்யாப் பேரை எழுப்பிவை!
அறியாமை இருளை அழித்துவை-உன்
ஆராய்ச்சி திறனால் ஒழித்துவை!
வானத்தில் கோள்களைச் செலுத்திவை - உன்
வலிமையால் நாட்டை வலுக்கவை!
ஏவு கணைகளைத் தாவவை -வின்னில்
ஏவிடும் இராக்கெட் நிறைத்துவை!
ஆயுதப் போரைத் தடுத்துவை-அதை
ஆற்றலுக் காகப் படைத்துவை!
தாயுடன் கன்றைச் சேர்த்துவை-அதைத்
தள்ள நினைப்போரை எள்ளிவை!




Comments