top of page

குழந்தைகளின் உரிமைகள்: ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேசப்பிரகடனம்: யூனிசெஃப் துணையமைப்பின் நடைமுறைகள்.

24 hours ago
2 min read

குழந்தைகளின் உரிமைகளுள் நாம் அடுத்துக் கவனிக்க வேண்டியது

சிந்திப்பதற்கான உரிமை, தன்னுணர்வு, மதம் உள்ளிட்ட அவரவரின் சுய

உரிமைகளையும் பாதுகாத்துக் கொண்டு, ஏனையோரின் உரிமைகளைப்

பாதுகாப்பதற்கான கடப்பாட்டுணர்வையும் வளர்த்துக்கொண்டு வாழ்வது.

ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு முன்வைக்கும் இலட்சியங்களில் ஒன்று,

உலக முழுவதிலும் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி

எல்லா நாடுகளின் குழந்தைகளையும் அவர்தம் உரிமைகளையும், சக

குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாத்து நிற்பதைக் குறித்து ஒரு

விழிப்புணர்வு உடையவர்களாக ஆக்குவது. இந்த உணர்வைக் குறித்த உலக

சாசனம் ஒன்றை ஒரு தீர்மானம் மூலம் வலியுறுத்தி, குழந்தைகளின்

உரிமைகள் அனைத்து நாடுகளின், அவற்றின் கூட்டமைப்பின் கடமை என்று

ஐக்கிய நாடுகளின் பொது அவையினால் ஏற்பும், அனைத்து உறுப்பினர்

நாடுகளின் கையொப்பமும் 1989 –ஆம் ஆண்டு நவம்பர் 20 -ஆம் தேதி

நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்னும் தீர்மானம் 49-இன் படி பிரகடனம்

செய்யப்பட்டுள்ளது.


சிந்தனையின் சுதந்திரம், தன்னுணர்வு, மதம் ஆகியவை குழந்தைகளின்

உரிமைகள். இந்த உரிமைகளும், இவற்றைப் பாதுகாத்து நிற்பதுவும்

பெற்றோரின் கடமைகள்; அவற்றை மதிப்பது உலகளாவிய மக்களின்,

அவர்தம் பிரதிநிதிகளின் பொது அவையின் கடமை என்பதையும் ஐக்கிய

நாடுகளின் பிரகடனத்தின் விதி 14 – இன் படி குழந்தைகளின் உரிமைகள்

குறித்த நெறிப்படுத்துதலை வழங்குவதும் பொது அவையின் கடமை

என்பதையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டிருக்கிறது.


ஒருவரின் மதத்தை அறிவிப்பதற்கான சுதந்திரம், அத்தகைய சுதந்திரங்களை

சட்டத்தினால் வரையறுக்கப்பட்டவாறு பொதுப் பாதுகாப்பின்படி

ஒழுங்குமுறைப்படுத்துவது, தார்மிக நெறிகள் அல்லது அடிப்படை உரிமைகள்

மற்றும் ஏனையோரின் சுதந்திரங்கள் உள்ளிட்டவற்றுள் அடங்குவதாகிறது.

இந்த சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் வென்றெடுப்பது மனித சமூகத்தின்


கடமை. அதை நிறைவேற்றுவதை வெறும் வார்த்தையினால் வென்றெடுத்து

விடுவோம் என்று பிரகடனம் செய்வதல்ல ஐ. நா. சபையினுடைய அல்லது

அதன் பிரதிநிதிகளுடைய நோக்கம். இவ்வாறு எந்த ஒரு கடமையையும்

நிறைவேற்றுவதை வென்றெடுக்க உலகளாவிய ஓர் அமைப்பு அவசியம்!

எந்த ஓர் அமைப்புமே ஏன் அவசியமாகிறது? தமிழ்நாட்டில் எதற்காக

‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பு

உருவாகிறது, அவ்வாறு உருவாக்கப்படும் ஒரு கிளை என்ன செய்யும்

என்பதைப் பற்றியெல்லாம் மிக அர்ப்பணிப்புணர்வு மிக்க ஓர் உரையை

‘தசிஎகச’ என்ற அமைப்பை, முன்னின்று உருவாக்கிய மூத்த எழுத்தாளர்

உதயசங்கர் ஆற்றினார். அந்த முதல் கிளை அமைப்பை உருவாக்கிய பின்,

அடுத்தடுத்துக் கிளைகள் உருவானபின் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்தும்

எதார்த்தமான நடைமுறை பற்றியும் அவர் எழுதிய கட்டுரை உட்பட, நவீனத்

தமிழ்ச்சிறார் இலக்கியம் பற்றி 20 மூத்த எழுத்தாளர்கள் ஆற்றிய

உரைகளைத் தொகுத்து இலண்டன் வாழ் ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு, புக்ஸ் ஃபார்

சில்ட்ரன் – தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய இரு

அமைப்புகளின் சார்பில் மிகச்சிறப்பான ஒரு தொகுதியை வெளியிட்டார்.

சங்கம் உருவானது, அது எடுத்த முதல் முயற்சியாக ஒரு பத்து நாள்கள்

தொடர் கருத்தரங்கம் நடத்தியது, அதன் உரைகள் அனைத்தையும் நாமே

முன்முயற்சி மேற்கொண்டு தொகுதியாக மக்கள் முன்வைத்தது.


இப்படி, நமது சமூகத்தில் எல்லாவிதமான மக்களும் ஏதோ ஓர் அமைப்பில்

ஒன்று சேர்ந்து தங்களுக்கான கோரிக்கைகளைப் பொதுச்சமூகத்தின்

முன்னால் வைக்கிறார்கள். அதற்கான ஆதரவைத் திரட்டுகிறார்கள்.

இயக்கங்களை நடத்துகிறார்கள். அதிகாரத்தின் கதவுகளைத் தட்டுகிறார்கள்.

சில சமயங்களில், ஏன், பல சமயங்களில் என்று கூடச் சொல்லலாம்-

‘வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள்’.


அமைப்பு என்பது கூட்டுக்கனவு. கூடிக் கனவு காண்பது. அந்தக் கனவை

நனவாக்குவதற்காகக் கூடிச்சிந்திப்பது. அப்படிச் சிந்தித்து அந்தக் கனவை

இன்னும் அழகாக்குவது. விரிவுபடுத்துவது. ஆழமும், நுட்பமும்

கொண்டதாக்கு வது. சமூகத்தின் முன்னால் அந்தக் கனவின் நியாயங்களை,


அந்தக் கனவை நனவாக்க வேண்டியதன் அவசியத்தை, அதனால் விளையப்

போகும் நன்மைகளை முன்வைப்பது, அந்தக் கனவு நனவாகும் வரை

போராடுவது, யாருக்காகக் கனவு கண்டோமோ அவர்களுக்கு அதன் பலன்கள்

முழுமையாகக் கிடைக்கச் செய்வது. எனவேதான் தனிமனிதர்களின்

கனவுகளை விட வலுவானவையாகக் கூட்டுக்கனவுகள் இருக்கின்றன.

எல்லாத் தரப்பினருக்கும் அவர்களுடைய கோரிக்கைகளுக்காகக்

குரல்கொடுப்பதற்காகப் பல்லாயிரம் அமைப்புகள் இருந்தாலும் சமூகத்தின்

மிக முக்கியமான பகுதியினரான குழந்தைகளின் நிலைமைகளைச்

சொல்வதற்கு எந்த அமைப்பும் இல்லை. ஏனெனில் குழந்தைகளின் மீது எதை

வேண்டுமாயினும் திணிக்கலாம். எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற பழமையான சிந்தனைகள்

தொடர்கின்ற சமூகமாக நம்முடைய சமூகம் இருந்து வருகின்றது.


குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை நமது சமூகம் எப்போதும்

மறந்துவிடுகிறது. அவர்களுடைய மறுப்பை மதிப்பதில்லை. அவர்களுடைய

கோரிக்கைகளுக்குக் காது கொடுப்பதில்லை. அவர்களுடைய விருப்பங்களை

நிறைவேற்றுவதில்லை.அவர்களுடைய உணர்ச்சிகளை மதிப்பதில்லை.

குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்குத் தேவையான கலை, இலக்கியம்,

விளையாட்டுகள் போன்றவை குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

அமைப்பு என்ன செய்யும் என்பதற்கு இப்போது சிறார்களிடம் நிகழ்ந்து

கொண்டிருக்கும் மாற்றங்களே சாட்சியங்கள் சொல்லும். அரசாங்கம்,

ஆசிரியர்கள், பெற்றோர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், குழந்தைகள்

நலச்செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் மிகப்பெரிய மாற்றங்களை

உருவாக்கியிருக்கிறது.


மேற்கண்ட இவையெல்லாமே நாம் அமைப்பாகச் சேர்ந்ததால் நிகழ்ந்த

மாற்றங்கள். தனி மனிதர்களின் முயற்சிகளை விடக் கூட்டு முயற்சிகளே

வலிமையானவை என்பதைக் காலம் நமக்கு உணர்த்திக்

கொண்டேயிருக்கிறது. நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். அதற்கு நாம்

அனைவரும் இணைய வேண்டும்!


சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

சிறார் இலக்கியம், சமூக அறிவியல், பயணங்கள், நூலகம், இசை அரசியல் என்று பல்துறைகளில் நேரடிக்களச்செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு நா.மகாலிங்கம் விருது, நல்லி திசைஎட்டும் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page