top of page

தக்காளி நீ! தக்காளி!

ree

தக்காளி நீ! தக்காளி!

செக்கச் சிவந்த தக்காளி! 

கிரீடம் வச்ச  தக்காளி 

உருண்டு  ஓடும் தக்காளி!

அம்மா வந்து ஆசையோடு 

கைகளாலே அள்ளி எடுக்க

அம்மா கையில் நீ இருக்க 

ஆசையோடு நான் பிடிக்க 

தப்பி எட்டி நீ குதிக்க 

தாவி ஓடி நானும் வர 

கண்ணாமூச்சி நீயாட

கண்ட நானும் பிடித்து விட! 

அம்மா கையில் உன்னைத் தர 

வாங்கிக் கொண்ட அம்மாவும்! 

துண்டு துண்டாய் வெட்டியே 

கொதிக்கும் குழம்பில் போட்டு விட!

ஆஹா என்ன வாசனை

ஆசையாகத் தட்டில் போட்டு 

அள்ளி அள்ளித் தின்றேனே! 

தலையைக் கோதும் அம்மாவை

வாரி அணைத்துக் கொண்டேனே!


சரிதா ஜோ 
சரிதா ஜோ 

சிறார் எழுத்தாளர், கதைசொல்லி. 20 –க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

1000 – க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகளையும்,

100 க்கும் மேற்பட்ட பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.

த மு எ க ச , தமிழ்ப்பேராயம் உள்ளிட்டு 20 – க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page