சித்திரையில் நத்தை ஒன்று
- குருங்குளம் முத்துராஜா

- Oct 15
- 1 min read

சென்னையிலே கிளம்புதாம்.
அத்தை வீட்டு பொங்கலுக்கு
பத்து மாத பயணமாம்!
அசைந்து நகர்ந்து மெல்ல மெல்ல
திருச்சி வந்து சேர்ந்ததாம்!
ஆடிப்பெருக்கு காவிரியில்
குளித்து கரை ஏறுதாம்!
மதுரை வந்து சேர்ந்திடவே
ஐப்பசியும் பிறந்ததாம் !
மாட வீதியில் ஆடை வாங்கி
தீபாவளிக்கு போட்டதாம்!
நத்தையோடு காலம் நகர
நல்ல தையும் வந்ததாம்
அத்தை வீட்டில் குமரி முனையில்
பொங்கல் இட்டு மகிழ்ந்ததாம்

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.
இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024
கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது
தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.




அத்தை வீட்டிற்கு மெல்ல மெல்ல பத்து நாள் பயணமா எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வாசிக்க வாசிக்க இன்பமாக இருந்தது நன்றி