வானவில்.
- குருங்குளம் முத்துராஜா

- Oct 15
- 1 min read

வானச் சிறுமி தலையில் வைத்த
வண்ண ரிப்பனா - இது
வட்ட நிலவை வரவேற்கும்
வளைவுப் பந்தலா !
புது நடனம் ஆடுகின்ற
மயிலின் தோகையா - இது
பூமிப்பந்தை சுற்றி வரும் வட்டப்பாதையா !
பூக்களாலே வரைந்து வைத்த
வாசல் கோலமா - இது
மேகங்களை தாண்டி செல்ல
போட்ட பாலமா !
வானவில் தான் காட்டுகின்ற
விந்தைகள் கோடி
கலைந்து போகும் வேகமாக
வாருங்கள் ஓடி!

சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள குருங்குளம்
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்.
இவரது முதல் நூல் 'பாட்டும் பாடமும்' தொடந்து பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம் " (எதிர் வெளியீடு) 2024
கொ மா கோதண்டம் நினைவு த மு எ க ச வின் சிறார் இலக்கிய விருது பெற்றுள்ளது
தனது சில பாடல்களை youtube : Muthu Raja Teacher இல் இசையுடன் காணொளியாக வெளியிட்டுள்ளார்.




Comments