உருளைக்கிழங்கும் முருங்கைக்காயும்

ஒரு ஊர்ல காய்கறிகள் மட்டும் வாழ்ந்து வந்ததாம்.
அங்கே மனித நடமாட்டமே இருக்காது.
உருளைக்கிழங்கும் முருங்கைக்காயும் உற்ற நண்பர்கள்.
அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள். ஊர் சுற்றுவார்கள்.
அவர்கள் இருக்கும் ஊரில் நிறைய செர்ரி மரங்கள் இருக்குமாம். தினமும்
அதன் பழங்களை சாப்பிட்டபடியே கதை பேசி கொண்டிருக்குமாம்.
முருங்கைக்காய் ஒரு நாள் ’ஏய் உருளைக்கிழங்கு நாம அந்த ஏரியை
தாண்டி அந்த பக்கம் போலாமா’ ன்னு கேட்டுச்சு. உருளை அதுக்கு
’வேணாம்’ ன்னு சொல்லியும் கேக்காம முருங்கைக்காய்
உருளைக்கிழங்கை அழைத்து சென்றதாம்.
அந்த ஏரியை கடக்க வேண்டுமென்றால் ஒரு வயசான மர வளைவு
இருக்கும். அது உத்தரவு கொடுத்தால் அந்த பக்கம் போக முடியும். அதன்
உத்தரவு பெற அதற்கு முன் ஒரு பாட்டு பாட வேண்டும்.
உருளைக்கிழங்கு மிகவும் யோசித்து அதன் அம்மா பாடிய பாட்டை
வயசான மர வளைவிடம் பாடியது.
மகிழ்ச்சியான வளைவு உருளையையும் முருங்கைக்காயையும் ஏரியை
கடந்து செல்ல உத்தரவிட்டது.
எப்படியோ ஏரியை கடந்து வேறு ஊருக்கு சென்று விட்டார்கள். அந்த ஊர்
முழுக்க மனிதர்கள் தான் இருப்பார்கள்.
உருளைக்கிழங்கிற்கும் முருங்கைக்காய்க்கும் மனிதர்கள் எல்லாம் பெரிய
உருவமாக தெரிந்தார்கள். அவர்கள் போட்டிருக்கும் செருப்புகூட
உருவத்தில் பயமுறுத்தியது. ஊரில் தெரிந்த கடைகளை பார்த்து
இரண்டும் கண்கள் விரித்து பார்த்தது.
மனிதர்கள் கண்களில் தென்படாதவாறு அவர்கள் காலடியில்
நசுங்கிடாதவாறு மிக கவனமாக பாதையின் ஓரமாக இரண்டும் நடந்து
சென்றது.
அன்று அவ்வூரில் ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. மனிதர்களில் யார்
பெரிய மீசையும் தாடியும் வளர்த்திருக்கிறார்களோ அவர்களே வெற்றி
பெற்றவர்கள்.
அந்த ஊர் ராஜா பெரிய மீசை வளர்த்திருந்தார். அவர் அப்போது
குதிரையில் வந்து கொண்டிருந்தார். அவருடைய மீசை மட்டும்
ஆளுயுரத்திற்கு வளர்ந்திருந்தது. அந்த மீசை இரண்டு பக்கமும் தூக்கிச்
செல்ல ஆட்களை நியமித்திருந்தார். யாரையும் குத்தி விடாமல் மீசையை
தாங்கி பிடித்து கொண்டு வருவதே அந்த பணியாட்களின் வேலை.
அவ்வளவு பெரிய மீசையை பார்த்ததும் உருளைக்கிழங்குக்கு ஏக
குஷியாகி விட்டது. முருங்கைக்காய் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அது
ராஜாவினுடைய மீசையை பிடித்து தொங்கியது. வலி தாங்காத ராஜா
தன்னுடைய உறைவாளை எடுத்து உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி
விட்டார்.
இதை பார்த்ததும் முருங்கைக்காய் பயந்து போய் ராஜாவிடம்
உருளையின் செயலுக்காக மன்னிப்பு கேட்டது. தன் நண்பனை இழந்த
துக்கத்தில் அழுதது.
ராஜாவுக்கு மிகவும் வருத்தமாகிப் போனது.
’என்னால் உருளைக்கிழங்கை திரும்ப ஒன்று சேர்க்க முடியாது. அதனால்
நீயாவது பிழைத்து போ. இங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு
மனிதர்களால் ஆபத்து தான்’ என்று சொன்னார்.
முருங்கைக்காயும் ’எல்லாம் என்னால் தான் வந்தது. உருளைக்கிழங்கின்
அம்மாவிற்கு என்ன பதில் சொல்வேன்’ என்று நொந்து கொண்டே தன் ஊர்
போய் சேர்ந்தது.





Comments