பறக்கும் பன்றி
- குருங்குளம் முத்துராஜா
- Apr 8
- 1 min read

பாவலன் நல்ல ஓவியன்தான்
பறக்கும் குதிரை படம் வரைந்தான்
அன்று இரவு அவன் கனவில்
பன்றி ஒன்று வந்தது பார்!
என்ன தம்பி நியாயம் இது?
என்னை மறந்தது எப்படி நீ
வலிமை மிகுந்த குதிரைக்குதான்
வாய்ப்பு வசதியும் தருவாயோ?
சேற்றில் கிடந்து உழல்கின்றேன்
சிரமப்பட்டு வாழ்கின்றேன்
விரட்டி வந்து அடிக்கின்றார்
வீல் வீலென அலறி துடிக்கின்றேன்
என்னைப் போன்ற எளியவர்க்கு
இறக்கைகள் தந்தால் ஆகாதா? என்ற
பன்றியின் குறையை நினைத்தபடி
படுத்து புரண்டான் பாவலனும்
உறக்கம் கலைந்து எழுந்தவுடன்
பறக்கும் பன்றி படம் வரைந்தான்!
Comments