வாண வேடிக்கை
- பாவண்ணன்
- Apr 5
- 1 min read
Updated: Apr 8

பட்பட் படார் டம்டம் டமார்
பட்டாசுச் சத்தம் கேட்கிறது
விமானம் போல வானில் ஏறி
பாதி வழியில் வெடிக்கிறது
இருட்டு படிந்த ஊரின் மீது
ஒளியை அள்ளித் தெளிக்கிறது
விலகிச் செல்லும் வெளிச்சக் கீற்று
எங்கோ வானில் கலக்கிறது
கண்ணைப் பறிக்கும் நிறங்களில் எல்லாம்
வண்ணப் பொறிகள் விழுகின்றன
அண்ணாந்து பார்த்து ரசிப்பதற்குள்ளே
அனைத்துப் பொறிகளும் மறைகின்றன
Comments