பூந்தட்டில் பூமிபந்து
- கொ மா கோ இளங்கோ

- Sep 15
- 1 min read

பூவைப் போல நட்சத்திரங்கள்
பூத்துக் குலுங்குதே – வானில்
பூத்துக் குலுங்குதே!
படகைப் போல நிலவின் பிம்பம்
குளத்தில் தெரியுதே – ஊர்க்
குளத்தில் தெரியுதே!
கொன்றை மலரின் வாசம் தாங்கி
காற்று வீசுதே – தென்றல்
காற்று வீசுதே!
முத்து முத்தாய்ப் பனித்துளிகள்
முதுகுக் கூடாகுதே – புல்லின்
முதுகுக் கூடாகுதே!
பந்தைப் போன்ற நமது உலகம்
பல்லுயிர்க்கு வீடானதே – அதைப்
பாதுகாத்தல் என்றும் நமதானதே!




Comments